மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா.?

mahalaya patcham in tamil

மகாளய பட்சம் செய்ய வேண்டியவை

இன்றைய பதிவில் மகாளய பட்சத்தில் செய்ய வேண்டியவையும் செய்ய கூடாதவையும் பற்றி தெரிந்துகொள்வோம். மகாளய அமாவாசை என்பது முன்னோர்களுக்காக வழங்கப்படுவதாகும். அமாவாசை மூன்று அமாவாசை  முக்கியமானது. அவை ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை ரொம்பவும் விஷேசமானது. ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் மகாளய பட்சம் விரதத்தை கடைபிடிப்போம். அதில் இந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் 25 ம் தேதி வரை மகாளய பட்ச காலமாகும்.

இதையும் படியுங்கள் ⇒ அமாவாசை நாட்கள் நேரம்

மகாளய பட்சத்தில் தவிர்க்க வேண்டியவை:

மகாளய பட்சத்தை கடைபிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. இந்த அற்புதமான நாட்களில் எந்த செயல்கள் செய்ய கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

முடி நறுக்க கூடாது:

மகாளய பட்சத்தில் 15 நாட்கள் முன்னோர்களுக்கு உணவு அளித்து விரதம் இருப்பவர்கள் முடி நறுக்க கூடாது. அதோடு நகங்களையும் வெட்ட கூடாது.

எப்படி சமைப்பது.?

மகாளய பட்சத்தில் விரதம் இருப்பவர்கள் மாலைக்குள் சமைத்து முன்னோர்களுக்கு படைத்து விட வேண்டும். சூரியன் மறைவிற்கு பின் எந்த சடங்குகளையும் செய்தால் அதற்கான எந்த பலனும் கிடைக்காது.

சுப நிகழ்ச்சிகள்:

மகாளய பட்சம் நாட்களில் வீட்டில் எந்த வித சுப காரியங்களையும் செய்ய கூடாது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க கூடாது.

அசைவம் சாப்பிடுவது:

மகாளய பட்சம் 15 நாட்களிலும் அசைவம் சாப்பிட கூடாது. அந்த நாட்களில் அசைவம் சாப்பிட்டால் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும். இதனால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.

மகாளய பட்சம் செய்ய வேண்டியவை:

  • மகாளய பட்சம் காலங்களில் தினமும் குளிக்கவிடவேண்டும்.
  • சைவ உணவுகள் மட்டும் சாப்பிட வேண்டும்.
  • முன்னோர்களை வழிபட்ட பிறகு தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.
  • தினமும் விளக்கு ஏற்ற வேண்டும்.
  • சமைக்கும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் சேர்க்க கூடாது.
  • தாம்பத்தியம் வைத்து கொள்ள கூடாது.
  • மகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் நம்மோடு இருப்பதால் கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர்த்து முன்னோர்களை நினைக்க வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்