Margazhi Matham in Tamil
இன்றைய ஆன்மீகம் பதிவில் மார்கழி மாதம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது குளிர் தான். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எந்த மாதிரியான நல்ல விஷயங்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மார்கழி மாதத்தில் பெண்கள் இதை மட்டும் செய்தால் போதும் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்..! |
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:
தமிழ் மாதங்களில் 9 வதாக வரும் மாதம் தான் மார்கழி. இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும். இருந்தாலும் பெண்கள் விடியற்காலையில் எழுந்து வாசலில் வண்ண கோலங்கள் இடுவார்கள். அதுபோல இந்த மாதம் முழுவது அனைத்து கோவில்களும் விசேஷமாக இருக்கும். மார்கழி மாதத்தை தெய்வீகமான மாதம் என்று சொல்வார்கள்.
அதுபோல மார்கழி மாதத்தில் திருமணம், மொட்டை அடித்தல் போன்ற விசேஷங்களை செய்ய மாட்டார்கள். இருந்தாலும் நாம் மார்கழி மாதத்தில் சில நல்ல நிகழ்ச்சிகளை செய்யலாம்.
1. இந்த மாதத்தில் திருமணம் செய்யவில்லை என்றாலும், திருமணத்திற்கு வரன் பார்ப்பது, ஜாதகம் பரிமாற்றம் செய்வது, நிச்சயம், வெற்றிலைப் பாக்கு கை மாற்றுவது, பூ முடித்தல், பத்திரிகை அடிப்பது அதுபோல குல தெய்வத்திற்கு பத்திரிகை சமர்ப்பிப்பது போன்ற சுப காரியங்களை மார்கழி மாதத்தில் செய்யலாம்.
2. மார்கழியில் சீமந்தம் போன்ற விசேஷங்களை செய்யலாம். அதுபோல கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரித்த 5 ஆவது மாதம் மார்கழி மாதமாக இருந்தால் வளைகாப்பு நிகழ்ச்சி செய்யலாம்.
மார்கழி அமாவாசை அன்று இரவு இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் கண்டிப்பாக நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! |
3. புதிதாக நிலம் அல்லது சொத்துக்கள் வாங்குவது மற்றும் பத்திரம் பதிவு செய்வது போன்ற நிகழ்ச்சிகளை மார்கழி மாதத்தில் செய்யலாம்.
4. பிறந்த குழந்தை மார்கழி மாதத்தில் பெயர் சூட்டுவது, குழந்தையை தொட்டிலில் இடுவது போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்யலாம்.
5. இந்த மாதத்தில் புதிதாக ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கலாம். அதுபோல வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.
6. மார்கழி மாதத்தில் புதிதாக வாகனம் வாங்கலாம். அதுபோல மற்ற மாதங்களை காட்டிலும் இந்த மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். அதனால் அதிகாலையில் எழுந்து யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.
மார்கழி மாதத்தில் வண்ண வண்ண கோலங்கள் போட வேண்டுமா அப்போ இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 மார்கழி மாதம் அசத்தல் கோலங்கள் 2022 – 2023
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |