Meena Rasi Raja Yoga Palangal in Tamil
இன்றய பதிவு ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே பொதுவாக ஆன்மிகத்தில் கூறப்படும் கிரகநிலை மாற்றத்தால் ராசிகளில் ஒரு சில ராஜயோகம் உருவாகும். ஆனால் 100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் ஏற்பட உள்ள நான்கு ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதாவது கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் மற்றும் ஹன்ஸ் ராஜயோகம் என நான்கு ராஜயோகங்கள் உருவாகவுள்ளது.
இந்த 4 யோகங்களும் மீன ராசியில் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் அதிலும் குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே அதிகப்படியான பலன் கிடைக்கும். அதனால் 12 ராசியில் ராஜயோகப்பலன்களை பெறப்போகும் 4 ராசிக்காரர் யார் என்பதை இங்கு பார்ப்போம்..!
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்
Meena Rasi 4 Raja Yoga Palangal in Tamil:
மிதுன ராசி:
மீன ராசியில் ஏற்படவிருக்கும் நான்கு ராஜயோகத்தினால் உங்களுக்கு வியாபாரத்தில் பல நன்மைகள் ஏற்படும். வேலை தேடுவோருக்கு நல்ல வருமானத்துடன் வேலை கிடைக்கும். மேலும் வேலை செய்யும் இடத்தில் மார்ச் மாதத்திற்கு பின் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களின் கல்வியில் நல்ல ஆர்வத்துடன் இருப்பார்கள். மேலும் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
கும்ப ராசி:
மீன ராசியில் ஏற்படவிருக்கும் இந்த ராஜயோகமானது உங்களின் அதிர்ஷ்ட வீட்டில் நடைபெறுவதால் உங்களின் வாழ்க்கை அதிர்ஷ்ட பாதையை நோக்கி செல்ல போகின்றது. அதாவது நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்து கைகூடி வரும் நேரம் இது. வருமான அதிகரிக்கும். நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி தான் முடிவடையும். மேலும் இழுபறியாக இருந்த பணிகள் அனைத்தும் இனிதே முடிவடையும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த நேரத்தில் விரைவில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு ராசி:
தனுசு ராசியின் 4-வது வீடுதான் மீன ராசி. அதனால் மீன ராசியில் ஏற்படும் நான்கு ராஜா யோகத்தால் தனுசு ராசிக்கு அதிக அளவு பலன் கிடைக்க போகின்றது. அதிலும் குறிப்பாக உங்களுக்கு பரம்பரை சொத்து விஷயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை அனைத்தும் திறந்து உங்களுக்கு பரம்பரை சொத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மேலும் வியாபாரம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். நீங்கள் தொடங்கும் அனைத்தும் காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்த ராசி எல்லாம் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாம்..! அப்போ இந்த ராசிக்காரவங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரவங்களா
ரிஷப ராசி:
மீன ராசியில் ஏற்படவிருக்கும் நான்கு ராஜயோகங்களும் உங்களுக்கு மிக அற்புதமான பலனைகளை அள்ளித்தர போகின்றது. ஏனெனில் இந்த யோகங்களானது உங்களின் லாப வீட்டில் உருவாகியுள்ளது. எனவே உங்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல போகின்றது. நீங்கள் செய்யும் தொழில் அல்லது வியாபாரத்தில் வருமான அதிகரிக்கும். மேலும் நிங்கள் செய்த பழைய முதலீடில் இருந்து இப்பொழுது உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகள் வந்து சேரும். மேலும் ரிஷப ராசி கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பானதாக அமையும். இப்பொழுது நீங்கள் ஏதாவது தேர்வு எழுதினீர்கள் என்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |