மீன ராசி
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் மீன ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். ராசிகளில் கடைசியான பன்னிரண்டாவது ராசியை கொண்டது தான் இந்த மீன ராசியாகும். இவர்களின் திருமண வாழ்கை, காதல் திருமணமாக இருக்குமா அல்லது வீட்டில் முடித்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்று பார்க்கலாம். மேலும் இவர்கள் எந்த ராசிகாரரை திருமணம் செய்தால் இவர்களின் வாழ்கை நன்றாக இருக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
மீன ராசிகாரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதை பற்றி தெரிந்துகொள்வோமா ? |
மீன ராசி திருமண வாழ்க்கை:
பொதுவாகவே மீன ராசிக்காரர்கள் ஒரு சிலர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி திருமணம் வாழ்க்கை அமையும். இவர்கள் பொதுவாக காதல் திருமணத்தை அதிகம் விரும்புவராக இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்கள் கன்னி ராசி உடையவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கன்னி ராசி உள்ளவரை திருமணம் செய்வதினால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
அதேபோல் மீன ராசிக்காரர்கள் கடக ராசி மற்றும் விருச்சகம் ராசியை உடையவரை திருமணம் செய்தாலும் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
மீனா ராசிக்காரர்கள் மீன லக்கணத்தை உடையவர்களை திருமணம் செய்யும் பொழுது, இவர்களின் வாழ்க்கை துணை கோபம் வந்தால் சத்தமாக கத்துபவராகவும், ஒரு சிலர் பொறுமையாகவும் இருப்பார்கள்.
இவர்கள் திருமணம் செய்யும் மீன லக்கணத்தை உடையவர்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கும், அதே சமயத்தில் இவர்கள் அதில் புத்திசாலி தனமாக இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்களின் ஏழாவது அதிபதி உச்சம் அடையும் பொழுது மிக பெரிய இடத்தில் பணி புரியவர்களாகவும், பல தொழில்களில் கொடிகட்டி பறப்பவராகவும், மிக பெரிய உத்தியோகத்தில் இருபவராகவும் மற்றும் அதிகமாக படித்தவராகவும் இருப்பார்கள்.
அதேபோல் இவர்களின் ஏழாவது அதிபதி நீச்சம் ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை பல கஷ்டங்களில் நடந்து கொண்டு இருக்கும், சில மாதங்களுக்கு பிறகு தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மீன ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் வீட்டில் மாமியார் அதிகமான சிந்தனைகளுடனும், பக்தியுடனும் இருப்பார்கள் மாமனார் வரப்போகும் மருமகள் (அல்லது) மருமகன் ஆழகானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பவராக இருப்பார்கள்.
மீனராசிக்காரர்கள் திருமணம் செய்ய போகும் மாமனார் கோவில் இருக்கும் இடங்களில் வீடு இருக்கும் அல்லது பள்ளி, கல்லுரிகள் இருக்கும் இடத்தில் இருக்கும். அப்படி இல்லையென்றால் வடக்கு, தெற்கு திசைகளில் அமையலாம்.
இவர்கள் திருமணம் செய்யும் துணையின் பெயர் D, P, A, S என்ற எழுத்தில் இவர்களின் பெயர்கள் இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |