மேஷம் ராசி திருமண வாழ்க்கை
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே திருமணம் வாழ்க்கை என்பது இரு மனமும் ஒன்று சேர்வதைத்தான் திருமண என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் மேஷ ராசிக்கார்களுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இவர்களின் ஏழாம் வீடானது துலாம், இவர்களின் அதிபதி செவ்வாய் ஏழாம் வீடு துலாம் என்பதால் இதில் செவ்வாய், ராகு, குரு, சுவாதி, விசாகம் போன்ற நட்சத்திரங்கள் இருப்பதால் இவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
மேஷம் ராசிக்கார்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யக்கூடாது ? |
Mesha Rasi Thirumana Valkai:
மேஷ ராசியில் பிறந்த ஆண் தன்னுடைய மனைவியை அவருடைய கட்டுக்கோப்புக்குள் வைத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். அவருடைய துணை மீது அதிகமாக பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள்.
மேஷ ராசியின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை இல்லற வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மனைவி மீது அதிகமாக சந்தேகப்படும் குணங்களும் அதிகம் இருக்கும்.
மேஷ லக்கினத்தில் அமையும் வாழ்க்கை துணையாக வருபவர்கள் அழகாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் பிடிவாத குணங்கள் அதிகமாக இருக்கும்.
மேஷ ராசிக்கு துணையாக அமைவார்கள் தெய்வபக்தி உடையவராகவும், ஆன்மிகத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவராகவும் இருப்பார்கள்.
பொதுவாக இவர்கள் துணையாக அமைந்தவர்கள் எல்லா விஷயங்களிலும் கணக்கு பார்ப்பவராக இருப்பார்கள். அதோடு வியாபார நுணுக்கங்களையும் கொண்டவராக இருப்பார்கள்.
இந்த மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை அமையும் இடமானது கடல், நதி போன்ற இடத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும். அதுமட்டுமின்றி வாழ்க்கை துணை அமையும் திசையானது மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் தான் அமையும்.
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வர போகும் துணையானவர் விவசாயம் சார்ந்த தொழில், இனிப்பு, அலங்கார பொருட்கள் விற்பனை போன்ற கடை வைத்திருப்பவராக இருப்பார்கள்.
இவர்களின் ஏழாவது அதிபதி உட்சமானால் அதிகமான பண வரைவை அடைவார்கள். அதே நேரம் அதிகமாக செலவுகளும் செய்வார்கள்.
அதே ஏழாம் அதிபதி நீச்சம் ஆனால் இல்லற வாழ்க்கையில் போட்டிகளும் சண்டைகளும் அதிகமாக இருக்கும். அதேபோல் உடலில் பிரச்சனைகள் ஏற்படும் இதனால் செலவுகளும் வந்து சேரும்.
ஏழாம் அதிபதி ஆட்சி பெரும் பொழுது வாழ்க்கையில் கோபமும், சந்தோஷமும் கலந்து வாழ்க்கை இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |