1 கைப்பிடி மிளகை இந்த இடத்தில் வைய்யுங்கள்..! பண வரவு நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும்..!

milagu pariharam in tamil

Milagu Pariharam 

அனைவருக்கும் ஏதோ ஒரு தேவை ஆனது அன்றாட வாழ்க்கையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய தேவை ஆனது சிலருக்கு அளவுக்கு அதிகமாக ஏற்படும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. அதிலும் சிலருக்கு கடின உழைப்பால் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட பணம் என்பதே வீட்டில் தங்கவில்லை என்பதும் சிலருக்கு பிரச்சனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனையினை தீர்ப்பதற்கு என்ன செய்வது, அதற்கான பரிகாரம் தான் என்ன என்பது நம்மில் பலருக்கும் தோன்றி இருக்கும். ஆனால் இதனை யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல் இருந்து இருக்கும். அந்த வகையில் இன்று போதும் போதும் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய மிளகு பரிகாரம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாருங்கள்..!

சமைக்கும் போது உப்பை இப்படி பயன்படுத்தினால் பணம் கொட்டுமாம்..

மிளகு பரிகாரம்:

பண கஷ்டம் என்பது நாம் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. என்ன தான் பணக் கஷ்டம் இருந்தாலும் கூட சிலருக்கு வீட்டில் பணம் வரவு என்பதே இல்லாமல் இருக்கும்.

இத்தகைய பிரச்சனை இல்லாமல் வீட்டில் பண வரவு செழிப்பாக இருக்க வெறும் 1 கைப்பிடி மிளகு மட்டும் போதும்.

மிளகு பரிகாரம் செய்வது எப்படி..?

மிளகு பரிகாரம்

மிளகு ஆரோக்கிய நன்மைக்கு மட்டும் பயன்படாமல் ஆன்மீகத்தில் பண வரவினை அதிகரிக்கவும் செய்கிறது.

அதனால் புதிதாக வாங்கிய 50 கிராம் மிளகு, 1 கைப்பிடி பச்சரிசி மற்றும் 2 தேக்கரண்டி பச்சை கற்பூரம் ஆகியவற்றை தயார்  நிலையில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வெள்ளை நிற காட்டன் துணையில் எடுத்து வைத்துள்ள பொருட்களை அதில் சேர்த்து நன்றாக மூட்டை போல் இறுக்கமாக கட்டி கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தயார் செய்து வைத்துள்ள தாந்திரீக அல்லது பரிகார மூட்டையினை பணம் வைக்கக்கூடிய உங்களுடைய வீட்டின் பீரோ அல்லது கல்லா பெட்டி இத்தகைய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். பின்பு உங்களுடைய மனதிற்கு பிடித்த கடவுளை வணங்கி கொள்ளுங்கள்.

எந்த கிழமையில் செய்வது:

மிளகு பரிகாரம்

இந்த மிளகு தாந்திரீக பரிகாரத்தை புதன் கிழமை, வெள்ளி கிழமை, சனிக்கிழமை, அமாவாசை, மூன்றாம் பிறை வரக்கூடிய  நாட்கள் ஆகிய நாட்களில் செய்யலாம்.

மேலும் இத்தகைய பரிகாரத்தை அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணிக்குள் செய்து விட வேண்டும். அதேபோல் மாலை 5 மணி முதல் இரவு 12 மணிக்குள் செய்து விட வேண்டும்.

பெண்கள் மற்றும் ஆண்கள் என யாரு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் மாதத்திற்கு ஒரு முறை இத்தகைய தாந்திரீக மூட்டையினை மாற்றி விட்டு பழைய மூட்டையினை நீரில் விட்டு விடுங்கள்.

இவ்வாறு 3 மாதம் வரை கொண்டு பண வரவிற்கான முயற்சியினை செய்து வந்தால் பண வரவு செழிப்பாக அதிகரிக்க ஆரம்பித்து விடும்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்