அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா..?

Advertisement

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை | Money Plant Benefits in Tamil

மணி பிளான்ட் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது ஒரு கொடி வகையை சார்ந்தது. இது பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மணி பிளான்ட்  அதிஷ்டம் தரும் செடியாக கருதப்படுகிறது. மணி பிளான்ட்டை வீட்டில் வளர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. இது அதிர்ஷ்டத்தை  கொடுக்கும் செடியாகவும் கருதப்படுகிறது. இது பண வளத்தையும், நல்ல வாய்ப்புகளையும்  கொடுக்கும் செடியாகவும் கருதப்படுகிறது. வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும்  வளர்க்கலாம்.      

மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில்  தான்  முதன்  முதலில்  கண்டுபிடிக்கப்பட்டது. மணி பிளான்ட் மலேசியா மற்றும் இந்தோனேசிய  போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. இதை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எந்த ஒரு செலவும் ஆகாது. மணி பிளான்ட்டை  வீட்டில் வளர்க்கும் பொழுது அதனை சரியான திசையில் வைக்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை கிழக்கு திசையில் வளர்ப்பது நல்லது  என்று கூறுகிறார்கள். எக்காரணத்தை கொண்டும் வடக்கு திசையில் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் நஷ்டம் ஏற்பட கூடும் என்று சொல்வார்கள். மணி பிளான்ட் செடியை வளர்ப்பதால் என்னென்னெ நன்மைகள் என்பதை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க …

பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்

மணி பிளான்ட் செடியின் மகிமைகள்:

 மணி பிளான்ட் செடியின் மகிமைகள்

  • மணிபிளான்ட்  செடியானது நாம்  சுவாசிக்கும் ஆக்சிஜனை காற்று மூலம்              அதிகப்படுத்தி தருகிறது. அதுமட்டுமில்லாமல் காற்றில் வரும் மாசுக்களையும் குறைத்து நமக்கு சுத்தமான காற்றையும் தருகிறது.
  • சிலபேர் வீட்டில்  மணி பிளான்ட்  செடியை வீட்டு உள்ளேயும்  வைத்திருப்பார்கள். ஏன்னென்றால் வீட்டில் இருக்கும் டிவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களில் இருக்கும் வைபிரேஷன் மூலம் பாதிப்பு ஏற்பட கூடாது என்று வைப்பார்கள்.  
  • இந்த செடியின்  இலைகள்  இதயத்தின் வடிவில் இருப்பதால் ஏதோ ஒன்று சொல்ல வருவது போல இருக்கும். இந்த இதய வடிவம் நமக்கு என்ன சொல்கிறது என்றால் நல்ல ஒரு அன்பு,  சந்தோஷம்  பெருகி வரும் என்று கூறுவது போல இருக்கும். 
  • மணிபிளான்ட்  செடியானது எந்த அளவுக்கு வளர்ந்து போகிறதோ  அந்த அளவுக்கு நம்  வீட்டில் சந்தோஷமும் அதிகமாகும்  என்று சொல்கின்றனர்.  

மணி பிளான்ட் செடி எந்த திசையில் வைக்கலாம் :

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

  • மணிபிளான்ட்  செடியை வளர்த்தால்  மட்டும் போதாது, அதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும் ஆலோசிக்க வேண்டும்.
  • மணிபிளான்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் இருப்பதால் அதனை தென்கிழக்கு திசையில் வளர்ப்பது நல்லது. 
  • தென்கிழக்கு திசையில் வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா.? சுக்கிரனை பிரதிநிதித்துவம் தென்கிழக்கு திசையாகவும், விநாயகருக்கு உகந்த திசையாகவும் கருதப்படுகிறது.
  • தென்கிழக்கு திசையில் வளர்ப்பதால் வீட்டில் செல்வ வளர்த்திற்கும், வருமானத்திற்கும் பஞ்சமே இருக்காது. 

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை:

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

  • மணி பிளான்ட் செடியை வளர்க்கும் பொழுது முதலில் கண்ணாடி பாட்டில்  இல்லையென்றால் வாட்டர் பாட்டிலில் வளர்க்கலாம். பிறகு அந்த கொடியின் சிறு தண்டினை நீர் நிரப்பி  வீட்டிலோ அல்லது  வெளியிலோ வைக்கலாம்.
  • இந்த செடி வேர் விடும் வரை தண்ணீரில் வைத்து பிறகு வேர் வந்ததும் மண் நிரப்பப்பட்ட  தொட்டியில் மாற்றி வளர்க்க வேண்டும்.
  • மணிபிளான்ட்  வேகமாக வளர வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி மண் வறட்சி ஆகாத அளவிற்கு வளர்க்க வேண்டும். மணிபிளான்ட்  செடியை சூரிய வெளிச்சத்தில் வைப்பதால் அதிக வளர்ச்சி அடைகிறது. 
  • இந்த செடி செழிப்பாக வளர்ந்த உடன் மாதத்தில்  ஒரு  முறையாவது இந்த  செடிகளின் இலைகளை கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி விட்டால் அழகாக  இருக்கும். அதன் பிறகு அதன் கொடி படர்ந்த பிறகு வீட்டில் வெளியே அழகா  அலங்கரித்து கட்டலாம். 

மணி பிளானட்  மண்ணில் வளர்ப்பது எப்படி.?

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

  • மணிபிளான்ட் செடியை வேர் இல்லாமல் மண் தொட்டியில் வைக்க கூடாது. வேர் இல்லையென்றால் அதனை ஒரு வாட்டர் பாட்டில் அரை அளவு தண்ணீர் ஊற்றி  அந்த செடியை வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு மாதம் கழித்து பார்த்தால்  வேர் முளைத்து இருக்கும். அதன் பிறகு மண் தொட்டியில் வைத்து வளர்த்து வரலாம்.
  • இந்த செடியை வைக்கும் பொழுது மண்ணில் வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து பின்பு செடியை வைக்கவும்.
  • வேப்பம்  புண்ணாக்கு கலப்பதன் மூலம் செடிகளில் பூச்சி வெட்டு தொல்லை இருக்காது. செடியும்  நன்றாக  வளரும். மணிபிளான்ட்  கொடி கீழே  படராமல் இருக்க அந்த தொட்டியில் ஒரு நீளமான கம்புகளை வைத்தால் கம்பை சுற்றி வளரும். இந்த முறையில்   நீங்களும் உங்க வீட்டில் வளர்த்து பாருங்கள். 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement