தினமும் மூன்று முறை இந்த மந்திரத்தை சொன்னால் போதும் கஷ்டங்கள் கரைந்து போகும்…!| Murugan Manthiram in Tamil

Murugan Gayathri Manthiram in Tamil

முருகன் ரகசிய மந்திரம் | Murugan Gayathri Manthiram in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்..! பொதுவாக மனதில்  கவலை இருந்தால் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் தீரும் என்பார்கள். சிலர் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கடவுளை வணங்குவார்கள். அவர்கள் முருகனை வணங்கும் போது தமிழ் கடவுளான முருகனின் மந்திரத்தை சொல்லி வணங்குவார்கள். அப்படி சில மந்திரத்தை சொல்லும் போது அவர்களுக்கு நன்மை அளிப்பது போல் இருக்கும். அந்த வகையில் தமிழ் கடவுளான முருகளின் ரகசிய மந்திர சொன்னால் கஷ்டங்கள் கரைந்து போகும்.

பணம் சம்பாதிக்க மந்திரம் 

முருகன் மூல மந்திரம்:

murugan mathiram

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ

எதிர்மறை, எதிர்ப்பு எதிரி, கண் திருஷ்டியை அழிக்கும் முருகன் ஸ்துதி

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை.

முருகன் ரகசிய மந்திரம்:

ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி
ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி
ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!

ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி

அகத்தியர் அருளிய முருகன் மூல மந்திரம்:

ஓம் முருகா, குரு முருகா,
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும்
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்