பாம்பை அடித்தால் நாகதோஷம் ஏற்படுமா..?

Advertisement

Naga Dosham in Tamil

இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகின்றோம். நாம் வாழும் இன்றைய உலகம் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மாறாமல் இருக்கிறது. அதில் ஆன்மீகமும் ஓன்று. என்னதான் இன்றைய நிலையில் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். நாகதோஷம் பற்றி நம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பாம்பை அடித்தால் நாகதோஷம் ஏற்படுமா..? இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

நாக தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

நாகதோஷம் என்றால் என்ன..? 

நாகதோஷம் என்றால் என்ன

ஜோதிடத்தில் பல தோஷங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான தோஷமாக கூறப்படுவது நாக தோஷம் தான். நாகதோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம், திருமணத்தடை மற்றும் தொழில் அல்லது வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது என்றும், புத்திர ஸ்தானத்தில் ராகு இருந்தாலும் நாகதோஷம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

பாம்பை அடித்தால் நாகதோஷம் ஏற்படுமா..?

நாம் இன்று வரை பாம்பை அடிப்பதால் தான் நாக தோஷம் ஏற்படுகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். சிலர் பாம்பை அடித்தாலும் அல்லது பாம்பை தொட்டால் கூட நாக தோஷம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் இது உண்மை கிடையாது.

அப்படி பார்த்தாலும் சிலர் பாம்புகளை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பெண்கள் அனைவருமே பாம்பை அடிக்கும் அளவிற்கு தைரியமானவர்கள் என்றும் சொல்லமுடியாது. சில பெண்களுக்கும் நாகதோஷம் இருக்கிறது. ஜாதக ரீதியாக கூட நாகதோஷம் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய் தோஷம் கண்டுபிடிப்பது எப்படி

 

அதனால் பாம்பை அடித்தால் நாக தோஷம் ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறம் நாக தோஷம் எப்படி வருகிறது என்று கேட்பீர்கள்.

 அந்த காலத்தில் வாழ்ந்த உங்கள் மூதாதையர்களில் யாராவது ஒருவர் பொறாமையால் அடுத்தவர்களின் குடும்பத்தை பிரித்து இருந்தாலோ, கணவன் மனைவியை பிரித்து இருந்தாலோ அல்லது செய்த வேலைக்கு கூலியை கொடுக்காமல் ஏமாற்றி இருந்தாலும், பெண்களின் பாவத்திற்கு ஆளாகி இருந்தாலும் இருந்தாலும், மற்றவர் சொத்தை ஏமாற்றி வாங்குவது, பசுவை கொள்வது, இயற்கை விஷயங்களை தேவையில்லாமல் சீரழிப்பது, கோவிலின் சொத்துக்கள் மீது ஆசை கொள்வது இதுபோன்ற ஏதேனும் தவறான செயல்களை செய்திருந்தால்  அவர்களுடைய வருங்கால சந்ததியினருக்கு அதாவது அவர்களின் பரம்பரையில் வரும் பிள்ளைகளுக்கு அந்தப் பாவம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. 

நம் முன்னோர்கள் செய்த பாவம் தான் நாகதோஷமாக ஏற்படுகிறது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த நாகதோஷத்தை ராகு கேதுவை வணங்கி வருவதன் மூலம் இந்த தோஷத்தில் இருந்து விடைபெறலாம்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement