நவக்கிரகம் இல்லாத சிவன் கோயில் எது?
நண்பர்களே வணக்கம் இன்று ஆன்மிகம் பதிவில் நவக்கிரகம் இல்லாத கோவில்களை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக சிவன் கோவில் என்றால் அதில் உள்ள கடவுள் சிலைகல் அதிகமாக இருக்கும். அது அனைவருக்கும் தெரியும். சிவன் கோவில் என்றால் அது ஓம் வடிவில் தான் இருக்கும். அது போல் நாம் கோவிலை சுற்றி வருவதும் ஓம் வடிவத்தில்தான் இருக்க வேண்டும். யாருக்காவது தெரியவில்லை என்றால் இனி அந்த தவறுகளை செய்யாதீர்கள்.
சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் முக்கியமாக கோவிலை சுற்றி வரும்போது மூலஸ்தானத்தில் நவக்கிரகங்கள் இருக்கும் அதனை யாரும் வழிபட மாட்டார்கள். அப்படி வழிபட்டால் அதற்களுக்கு நவகிரகங்கள் தோஷம் இருப்பவர்கள் மட்டுமே வழிபடுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நவகிரகங்கள் இல்லாத சிவன் கோவில் இருக்கிறது அது தெரியுமா? வாங்க அதனைப்பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம்.
நவகிரக மந்திரம் சொன்னால் நன்மைகள் நடப்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம் |
நவக்கிரகம் இல்லாத சிவன் கோயில் எது?
- சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நவகிரகங்கள் இல்லை.
- ஏன் அங்கு நவகிரங்கள் வைக்கவில்லையென்றால் அங்கு எமதர்மன் வந்து வழிபட்ட தளம் என்பதனால் அங்கு நவக்கிரகங்கள் இல்லை என்பார்கள்.
திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நிதி இல்லை காரணம் அங்கும் எமதர்மன் வந்து வழிபட்டதால் நவகிரகங்கள் இல்லை.
- ஸ்ரீவாஞ்சியம் எனும் கோவிலில் எமதர்மனுக்கு முக்கியத்துவம் தருவார்கள் அதனால் அந்த கோவிலும் நவக்கிரகம் இல்லை.
- திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்சீலி சிவத்தலத்தில் நவகிரகங்கள் இல்லை.
- திருவையாற்றிற்கு அருகே உள்ள திருமழபாடி எனும் கோவிலில் நவகிரகங்கள் இல்லை.
- திருப்புறம்பியம் பதினோராவது ஸ்தலதிலும் நவகிரங்கள் கிடையாது.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |