நினைத்த காரியம் நிறைவேற
பொதுவாக ஆண், பெண் இருவரில் யாராக இருந்தாலும் மனதில் நினைக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சிலர் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று கோவிலில் விளக்கு போடுதல் மற்றும் பூஜை போன்றவற்றை செய்வார்கள். அதிலும் சிலர் கடவுளிடம் மனதார வேண்டி கொண்டு சாப்பிடாமலும் இருப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சில நேரத்தில் நாம் நினைக்கும் காரியம் நிறைவேறாமலும் போகிவிடும். அதனால் நீங்கள் மனதில் நினைக்கும் காரியம் நிறைவேற 3 செயல்களை மட்டும் தொடர்ந்து செய்யாமல் இருந்தால் போதும். அது என்னென்ன செயல்கள் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?
நினைத்த காரியம் நிறைவேற செய்யக்கூடாத விஷயங்கள்:
மற்றவரை பற்றி பேசக்கூடாது:
நாம் நினைத்த காரியம் நிறைவேறாமல் போவதற்கு நம்முடைய செயலும் ஒரு விதமான தடையாக அமைகிறது. அந்த வகையில் நாம் மற்றவரை பற்றி தவறாக பேசுதல் மற்றும் தவறான செயல்களை செய்வதனாலும் அல்லது அவற்றை செய்ய தூண்டுவதனாலும் மனதில் நினைத்த காரியம் நடப்பதற்கு தடை ஏற்படலாம். அதனால் இதுபோன்ற செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
எதிர்மறையான எண்ணங்கள் இருக்க கூடாது:
நீங்கள் மனதில் ஏதாவது ஒரு காரியத்தை பற்றி நினைத்து அது கட்டாயமாக நிறைவேற வேண்டும் என்று நினைக்கும் போது அதில் உறுதியாக இருங்கள்.
ஒருவேளை நீங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்காமல் போய்விடுமோ என்று எதிர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளாமல் அந்த காரியம் நடந்து முடிந்தது போல நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
நம்முடைய மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களால் கூட நினைத்த காரியம் நிறைவேறாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கெட்டதை நினைக்க கூடாது:
நம்முடைய வாழ்க்கையில் சில நேரத்தில் துன்பமான செயல்கள் கூட வரும். அந்த சமயத்தில் மட்டும் அதை நினைத்து வறுத்த படுங்கள். ஆனால் அதனையே பின்தொடராதீர்கள்.
மனதில் நினைத்த காரியம் நடக்காமல் போகுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட நல்லது மட்டுமே நடக்கும் என்ற நல்ல எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள். இப்படி இல்லாமல் நாம் கெட்டதாக நடந்து விடுமோ நாம் நினைத்தால் கூட நினைத்த காரியம் நடக்காது என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |