பணக்கஷ்டம் தீர என்ன வழி
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணமே தங்க மாட்டிகிறது என்று யோசிப்பவரா நீங்கள்.! அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். வீட்டில் பணம் தங்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்கிறீர்கள். அதில் மாலை 6 மணிக்கு மேல் இந்த பதிவில் கூறியுள்ள தவறை மட்டும் செய்யாதீர்கள்.
மாலை 6 மணிக்கு மேல் செய்ய கூடாத தவறுகள்:
பால் சார்ந்த பொருட்கள்:
பால், மோர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை தானமாகவோ, கடனாகவோ மாலை 6 மணிக்கு மேல் கொடுக்க கூடாது.
முடி நறுக்க கூடாது:
மாலை 6 மணிக்கு தூங்க கூடாது. அது போல வீட்டில் முடி நறுக்கவோ, அல்லது கடையில் சென்றோ முடி கட் செய்ய கூடாது. இது போல் செய்தால் வீட்டில் தரித்திரியம் தங்கிவிடும்.
தலை சீவ கூடாது:
பெண்கள் தலைக்கு குளித்திருந்தாலும் மாலை 6 மணிக்கு தலையை விரித்து போட கூடாது. மேலும் தலையில் பேன் பார்ப்பதோ, தலை சீவவோ கூடாது.
வீட்டை பெருக்கும் முறை:
வீட்டை மாலை 6 மணிக்கு மேல் பெருக்கவும் கூடாது. அது போல குப்பைகளையும் வெளியில் கொட்ட கூடாது.
வீட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி யாரையும் திட்ட கூடாது, சபிக்கவும் கூடாது.
கஷ்டம்:
குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீட்டில் உள்ள கஷ்டத்தை சொல்ல கூடாது. என்னைக்காவது ஒரு கஷ்டத்தை சொல்லலாம். தினமும் கஷ்டத்தை சொல்லி புலம்ப கூடாது. கஷ்டத்திற்கான தீர்வை பற்றி பேசி கொள்ளலாம்.
பக்தி பாடல்கள்:
மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை வீட்டை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பக்தி பாடல்களை கேட்கலாம்.
துணி துவைக்க கூடாது:
மாலை நேரத்தில் துணிகளை துவைக்கவும் கூடாது, வெளியில் சென்று காய வைக்கவும் கூடாது. துணிகள் மடிக்காமல் கலைந்து இருக்க கூடாது. 6 மணிக்குள் துணிகளை மடித்து வைத்துவிட வேண்டும்.
விளக்கு ஏற்ற வேண்டும்:
அசைவ சாப்பிடும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்ற வேண்டும். இல்லையென்றால் மாலை நேரத்தில் கண்டிப்பாக விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
வாசல் கதவு திறந்திருக்க வேண்டும்:
மாலை 6 மணியிலுருந்து வாசல் கதவு திறந்திருக்க வேண்டும். வீட்டில் உள்ள எல்லா லைட்டையும் போட்டு விட வேண்டும்.
மாலை 6 மணிக்கு மேல் நீங்கள் பேசும் வார்த்தைகளில் முடியாது, இல்லை என்று நெகட்டிவ் ஆன வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
மாலை 6 மணிக்கு மகாலக்ஷ்மி வீட்டிற்கும் வரும் நேர என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் தான் அந்த நேரத்தில் மேல் கூறப்பட்டுள்ள தவறுகளை செய்யாதீர்கள்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |