Pana Kastam Theera Tips in Tamil
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் பணம் என்பது மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றது. ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம் எங்கள் வீட்டில் அனைவருமே வேலைக்கு செல்கின்றோம். ஆனால் அவ்வளவாக பணத்தை சேமிக்கவே முடிவதில்லை. ஏதாவது ஒரு வகையில் பணம் செலவாகிவிடுகின்றது என்று சொல்வார்கள். இப்படி உங்கள் வீட்டிலேயும் பணவரவு குறைவாகவும் பணத்தேவை அதிகமாகவும் அதாவது பணக்கஷ்டம் அதிகமாகவும் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டமும் தீர்ந்து பணவரவு அதிகமாக உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து உங்கள் வீட்டின் பணவரவை அதிகமாக்கி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> திடீர் பணவரவிற்கு இந்த மூன்று பொருட்களை இப்படி வையுங்கள் போதும்
Pana Kastam Theera Vali in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் தீர்ந்து பணவரவு அதிகமாக உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காணலாம்.
முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி அதில் ஒரு பாதியில் மஞ்சள் மற்றொரு பாதியில் குங்குமம் தடவி வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்கள் வீட்டின் வாசலின் வலது புறம் மஞ்சள் தடவிய பழத்தையும் இடது புறம் குங்குமம் தடவிய பழத்தையும் வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் இரண்டு அகல் விளக்கினை எடுத்து அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி உங்கள் வீட்டின் வாசலின் இரண்டு புறங்களிலும் ஏற்றி கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் வீட்டின் பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி துர்க்கை மற்றும் மகாலக்ஷ்மியை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.
இதனை தொடர்ந்து ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் இராகு காலத்தில் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் தீர்ந்து போவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீடு தேடி பணம் வருவதை யாராலும் தடுக்க முடியாது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |