பெண்களே இந்த மாதிரியான வளையலை மட்டும் கையில் போடுங்கள் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும்..!

பெண்கள் வளையல் 

பெண்களுக்கு என்று நிறைய ஆபரணங்கள் இருக்கிறது. வளையல், தோடு, கொலுசு, மணி மற்றும் ஜெயின், மூக்குத்தி மற்றும் மெட்டி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் பெண்களின் அழகினை மேலும் கூட்டுவதற்காக இருக்கிறது. ஆனால் இவை அதற்கு மட்டும் பயன்படாமல் சில ஆன்மீக காரணத்திற்காகவும் பயன்படுகிறது. அதுபோல ஒரு வீட்டில் பெண்கள் இருந்தால் தான் அது ஒரு வீடாகவும் மற்றும் மஹாலக்ஷ்மி உள்ளதாகவும் நம் முன்னோர்கள் கூறுவார்கள். அப்படி கூறும் பட்சத்தில் பெண்கள் சாதாரணமாக கையில் வளையல் அணிவதில் கூட சில அதிஷ்டங்கள் நிறைந்து இருக்கிறது. ஆகவே பெண்கள் எந்த மாதிரியான வளையலை கையில் அணிந்தால் பண வரவு அதிகரித்து கொன்டு இருக்கும் என்று தெரிந்துக்கொண்டு நாமும் அதனை செய்து பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..

பெண்கள் கையில் வளையல் அணிதல்:

பெண்கள் கையில் வளையல் அணிந்து இருந்தால் அது குடுபத்திற்கு நல்லது. அப்படி இருக்கும் போது சில வளையலை மட்டும் நீங்கள் குறிப்பாக அணிந்தால் பணவரவு அதிகரித்து கொண்டு இருக்கும்.

சங்கு வளையல்:

சங்கு வளையல்

மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய சங்கினால் ஆனா வளையலை பெண்கள் கையில் அணிந்தால் அது குடும்பத்திற்கு நல்லது.

அதுமட்டும் இல்லாமல் சங்கு வளையலை கையில் அணிவதால் மஹாலக்ஷ்மியின் அம்சம் பெண்களுடைய கையில் வந்து பணவரவு அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இத்தகைய சங்கு வளையலை கையில் நீங்கள் அணிந்துகொண்டு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்தால் போதும் அந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெரும்.

பெண்கள் சங்கு வளையல் அணிந்துகொண்டு புதிதாக ஒரு தொழிலை ஆரம்பம் செய்து வைத்தாலும் கூட அது வெற்றி அடைந்து ஒரு பெரிய நிலைக்கு வரும்.

கையில் சங்கு வளையலை அணிந்து கொண்டு ஒருவரை வாழ்த்தினால் போதும் அவர்கள் உங்களுடைய வாழ்த்து படி நிச்சயமாக வாழ்வார்கள்.

அதேபோல இந்த வளையலை கையில் அணிந்து கொண்டு எந்த ஒரு பொருளை மற்றவருக்கு தானம் செய்தால் போதும் குடும்பத்தில் வறுமை என்பதே இல்லாமல் செல்வம் செழித்து காணப்படும்.

வீட்டில் இருக்கும் அரிசிப்பானையில் இந்த சங்கு வளையலை பெண்கள் அவர்கள் உடைய கையினால் போட்டால் போதும் எக்காலத்திற்கும் உணவிற்கான தட்டுப்பாடு என்பதே வராது என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

 சங்கு வளையல் மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியதோடு மட்டும் இல்லாமல் குபேரர் மற்றும் விஷ்ணு ஆகியோரின் அம்சமும் இருப்பதால் இதனை பெண்கள் கையில் அணிந்தால் பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இத்தனை சிறப்பு அம்சங்கள் சங்கு வளையலில் இருப்பதால் நம் முன்னோர்கள் காலத்தில் இதனை திருமணம் ஆகி போகும் பெண்களுக்கு கொடுக்கும் சீதன பொருட்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்