பெண்கள் இந்த விஷயங்களை பின்பற்றினால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்..!

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்..! அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். செல்வ வளம் அதிகரிக்க பரிகாரம் செய்யாமல் வீட்டில் உள்ள பெண்கள் சில விஷயங்களை கடைபிடித்தால் செல்வ வளம் அதிகரிக்கும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. வாங்க செல்வ வளம் அதிகரிக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

பெண்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்:

பெண்கள் தூங்கும் முறை:

பெண்கள் தூங்கும் முறை

பெண்கள் வீட்டில் எப்பொழுது தூங்கினாலும் சரி குப்புறப்படுத்து தூங்க கூடாது. நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தோ தான் தூங்க வேண்டும்.

சமையலறை:

சமையலறை

காலையில் எழுந்த உடனே பல் துலக்கிவிட்டு சமயலறைக்கு செல்வார்கள். ஆனால் சமையலறைக்கு குளிக்காமல் செல்ல கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. இன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் கடைபிடிக்க முடியும் என்று தெரியவில்லை, இருந்தாலும் எந்த வித தோஷமும் ஏற்படாமல் இருப்பதற்கு வாயில் ஒரு கல் உப்பு போட்டு விட்டு சமையலறைக்கு செல்லுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒  நீங்கள் நினைத்த காரியம் நடக்க பேப்பரில் இந்த மாதிரி எழுதி வையுங்க..!

தலைக்கு எண்ணெய் வைக்கும் முறை:

தலைக்கு எண்ணெய் வைக்கும் முறை

பெண்கள் வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதுவும் வெள்ளி கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

மறந்தும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

மெட்டி அணிவது:

மெட்டி அணிவது

அந்த காலத்தில் திருமணமான பெண்கள் கால்களில் மெட்டி அணிந்திருந்தார்கள். ஆனால் இப்போது யாரும் மெட்டி அணிவதில்லை. திருமணமான பெண்கள் கட்டாயம் மெட்டி அணிந்திருக்க வேண்டும். அந்த மெட்டியானது கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலில் மெட்டி அணிய வேண்டும். மேலும் மெட்டியை தேயும் நிலை வர வரைக்கும் பயன்படுத்த கூடாது.

தலை சீவும் முறை:

தலை சீவும் முறை

பெண்கள் சிலர் நின்றபடியே, நடந்தபடியே தலையை சீவுவார்கள். இது முற்றிலும் தவறானது. ஏனென்றால் நீங்கள் தலை சீவும் போது முடி எப்படி அங்கங்கே இருக்கிறதோ அது போல தான் உங்கள் வாழ்க்கையும் இருக்கும். அதனால் தலை சீவும் போது உட்கார்ந்து கொண்டு சீவ வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  உங்கள் வீட்டில் இந்த 3 இடத்திலும் உப்பை வையுங்கள்..! பணம் கஷ்டமே இருக்காது..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்