Pana Varavu Athikarikka
அனைத்து ஆன்மிக நெஞ்சங்களுக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! பொதுவாக மாதங்களில் தெய்வ வழிபாட்டிற்கு மிகசிறந்த மாதம் என்றால் அது மார்கழி தான். இப்படி மிக சிறப்பு வாய்ந்த மார்கழி மாத அமாவாசை அன்று இரவு வீட்டில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைந்து பண வரவு அதிகரிக்கும். அப்படி என்ன பரிகாரம் அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் கடன் சுமை அதிகரித்து உங்களை பாடாகப்படுத்துகிறது என்றால் அந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இதனை குறிக்கும் வகையில் கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கூறியுள்ளார்.
இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ள மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வரக்கூடிய பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களை அளிக்கும்.
அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் ஒரு மஞ்சள் துணியில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, ஒரு துண்டு விரலி மஞ்சள் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து நன்கு முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி மனதார லட்சுமி தேவியை நினைத்து அடுத்த வருடத்திற்குள் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் மற்றும் கடன் சுமைகள் அனைத்தும் நீங்கிவிட வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்.
இந்த பரிகாரத்தை மார்கழி அமாவாசை அன்று செய்துபாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்கள் மற்றும் கடன் சுமைகள் நீங்குவதை நீங்களே காணலாம்.
மார்கழி மாதத்தில் பெண்கள் இதை மட்டும் செய்யுங்கள் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |