பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்..!

Panguni Matham Kulanthai Piranthal in Tamil

பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்..! Panguni Matham Kulanthai Piranthal in Tamil

அனைவரது வாழ்விலும் திருமணம் என்பது ஒரு கோலாகலமான திருநாள் ஆகும்.  குறிப்பாக ஒரு ஆண், பெண் வாழ்வில் ஒன்று சேர்வதற்காக நல்ல நேரத்தில் நடைபெறும் ஒரு விழா. திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்று சேர்வது மட்டுமல்ல இரண்டு குடும்பமும் ஒன்று சேரும் திருவிழா ஆகையால் அனைத்திற்கும் நல்ல நேரம் பார்ப்போம். திருமணம் என்பது எதற்காக ஒரு குடும்பம் தழைப்பதற்காகவே நடத்தப்படுகிறது.

ஒரு குடும்பத்திற்கு வாரிசு உருவாகுவதற்கு நல்ல நேரம் பார்த்தே சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்பாடு செய்வார்கள். அவ்வாறு நல்ல நேரத்தில், நல்ல நாளில் நடைபெற்றால் தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகவும், அறிவாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் பிறக்கும் என்பது ஐதீகமாம். என்ன தான் இருந்தாலும் திருமணம் ஆனா தம்பதியர்களுக்கு குழந்தை பிறப்பது என்பது மிக பெரிய பரிசாகும். இருந்தாலும் பல குழந்தை இந்த தினத்தில் பிறக்கலாம், குழந்தை இந்த மாதத்தில் பிறக்கலாம் என்று பல கேள்விகளை கேட்டு கொண்டு தான் இறுகின்றின.  அந்த வகையில் பங்குனி மாதம் பிறக்கும் குழந்தையின் குணம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இப்பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன பலன்..!

தமிழ் மாதங்களில் 12 மாதங்கள் உள்ளன. இந்த 12-வது மாதம் தான் பங்குனி மாதம். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். மேலும் 12-வது மாதமும், 12-வது நட்சத்திரமும் சேர்கின்ற நாளைத்தான் பங்குனி உத்திரம் என்று சொல்வார்கள். இந்த பங்குனி உத்திரம் தினத்தில் தான் பல தெய்வங்களுக்கு திருமணம் நடைபெறகிறதாம். அதேபோல் தமிழ் கடவுளான முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே இந்த பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு தெய்வங்களின் ஆசிர்வாதம் மிக பரிபூரணமாக கிடைக்கும். பங்குனி மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்:

இந்த பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் தன் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள முடியாதாம். இவர்களுக்கு ரகசியங்களை மறைக்க தெரியாது. ஏழைகளிடமும், வாயில்லாப் பிராணிகளிடமும் மிகுந்த இரக்க காட்டுவார்கள்.

இவர்கள் பிறருக்கு அவ்வளவு எளிதில் வாக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே காட்டுவார்களாம். இவர்கள்கு எதிரிகளை திட்டமிட்டு வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் செல்வதில் விருப்பம் இருக்காதாம். எதையும் முறையாக திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். இயற்கைக் காட்சிகளை அதிகம் விரும்பி ரசிப்பார்கள்.

உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே போல வெகு எளிதில் மனத் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். இவர்களின் பேச்சில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதில் மற்றும் பணி புரிவதில் வல்லவர்கள். இவர்கள் சதா எந்நேரமும் பல்வேறு விதமான எண்ணங்களில் மூழ்கி இருப்பார்கள். தம்மைச் சார்ந்தவர்களை எல்லாவகையிலும் திருப்தியடையும்படி செய்வார்.

குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். எப்போதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களிடம் சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கும். இவர்கள் ஒரு சில விஷயங்களில் அடங்கி போவார்கள். இவர்கள் பதுங்குவது பாய்வதற்கு தான். எவ்வளவு சோதனை வந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். அதே போல எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள். இவர்கள் அடிக்கடி தம்முடைய லட்சியங்களை மாற்றிக்கொள்வார்கள்.

இவர்களிடம் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் புகழ்ச்சிக்கு ஆசைபடுபவர்கள். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்களின் இளமை வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். வெகு சீக்கிரத்தில் யாவரையும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கிக்கொள்வர். இவரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்குவது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். மற்றவர் சுகத்தைத் தன் சுகமாக கருதும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள் இவர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்