பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில ஆன்மிக தகவல்கள்.!

pengalukana aanmiga thagavalgal

ஆன்மீக தகவல்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மிக தகவல்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இவை வீட்டில் இருக்கும் கல்யாண ஆன பெண்களுக்கும், கல்யாண ஆகா போற பெண்களுக்கும் இந்த பதிவு முக்கியமாக இருக்கும். பொதுவாகவே நம் வீட்டில் அதிகப்படியான சாஸ்திரங்களும், ஆன்மிககளையும் அதிகமாக பார்த்து வருகிறோம். அதுவும் அய்யர் வீட்டு பெண்கள் சாமி கும்பிடுவதற்கும், விளக்கு எந்த திசையில், எந்த நேரங்களில் ஏத்த வேண்டும் என்று பல ஆன்மிக தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதில் பெண்கள்  அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பார்க்கலாம் வாங்க.

முக்கியமாக பெண்கள் தெரிந்துகொள்ள விஷயங்கள்

 

பெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்:

வெள்ளி கிழமை அன்று சில தவறுகளை செய்யக்கூடாது. என்று நம் முன்னோர்கள் அதிகமாக சொல்லிருப்பார்கள். அந்தவகையில் பெண்கள் பொதுவாக காலை நேரங்களில் தண்ணீர் தெளித்தோ அல்லது சாணம் சேர்த்து தண்ணீர் தெளித்து, மகா லட்சுமிக்கு உகந்த தாமரை பூ கோலம் போடுவது மிகவும் நல்லது. அதேபோல் பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கு நின்ற படி கோலம் போட வேண்டும்.

அம்மாவாசை, வீட்டில் தவசம் போன்ற நாட்களில் கோலம் போடுவதை தவிர்ப்பது நல்லது.

வியாழக்கிழமை அன்று இரவு சாப்பிட்ட பிறகு சமையல் அறையை சுத்தம் செய்த்து விட்டு வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி கடாட்சத்துடன் சமையலை  தொடங்குவது  நல்லது.

வீட்டில் ஒட்டடை அடிப்பது, அடுப்புகளை கழுவது, வீட்டை சுத்தம் செய்வது  இது போன்ற விஷயங்களை வெள்ளி கிழமை அன்று செய்வதை முழுமையாக தவிர்ப்பது நல்லது. சிலர் வீட்டை பெருக்கும் பொழுது ஒட்டடையை பார்த்தால் சுத்தம் செய்வார்கள், அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் சமைக்கும் பொழுது முக்கியமாக வெள்ளி கிழமையில் பருப்பு சேர்த்து தான் சமைப்பார்கள், அப்படி பருப்பு சேர்த்து குழம்புகள் வைக்கவில்லை என்றால், சாதம் வடிக்கும் பொழுது சாஸ்திரத்திற்கு 3 துவரம் பருப்பை சேர்த்து வடிப்பது நல்லது.

பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு துணி துவைப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் சில நேரங்களில் வெள்ளி கிழமை அன்று அழுக்கு துணிகளை துவைப்பார்கள், வெள்ளி கிழமை அன்று அழுக்கு  துணிகளை துவைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இவ்வாறு செய்வதால் தர்திரியம் என்று சொல்லப்படுகிறது.

சில வீடுகளில் குப்பை தொட்டியில் அதிகமாக துர்நாற்றம் அடித்து கொண்டே இருக்கும். வாரத்தில் 3 முறையாவது சுத்தம் செய்த்து வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் எப்பொழும் மங்களகரமாக இருக்கும்.

பெண்கள் வெள்ளி கிழமை அன்று மஞ்சள் கயிறை மாற்றுவதை தவிர்க்கவேண்டும். திருமணம் ஆன பெண்கள் ஒரு மெட்டியை அணிவது தான் நல்லது, என்று சொல்லப்படுகிறது, 3 மெட்டிகள் அணியக்கூடாது.

வீட்டில் விசேஷ நாட்களில் கசப்பான உணவுகளை சமைக்க கூடாது. முக்கியமாக பாவற்காய் சமைக்க கூடாது.

பெண்கள் புடவை கட்டும் பொழுது முந்தியை தொங்கவிட்டு நடக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் மாதவிலக்கு நாட்களில் தலையில் பூ வைப்பதை தவிர்க்க வேண்டும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்