Advertisement
பிறந்த தேதி பலன் | Pirantha Naal Palangal
நம்முடைய குடும்ப வாழ்க்கை, வேலை, தொழில் இதெல்லாம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருக்கும். அதனால் நாம் நம்முடைய பிறந்த ராசி, நட்சத்திரம், தேதி அடிப்படையில் பலன்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பிறந்த தேதி வைத்து பலன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பிறந்த தேதி கூட்டு எண் – Astrology in Tamil by Date of Birth
- 1,10, 19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஈசியாக அனைவரிடமும் பழகும் குணமும், தைரியசாலிகளாவும் இருப்பார்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகம் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- எதையும் சிந்தித்து செயல்படக்கூடிய குணமும், மற்றவர்களுக்கு நல்லது செய்யும் எண்ணமும் கொண்டிருப்பார்கள். எது சரி? எது தப்பு? என்று புரிந்து கொண்டு நடப்பார்கள்.
- எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பார்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடமாட்டார்கள், தங்களது பிரச்சனைகளை தாமே சமாளித்து கொள்ளும் திறமை உடையவர்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள்.
- பிடிவாத குணம் கொண்டவராகவும், தனது சந்தோஷத்திற்காக அதிகம் செலவு செய்வார்கள். ஆடை, ஆபரணங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
Date of Birth Astrology in Tamil:
- 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். கற்பனை திறனும், கலை ஆர்வமும் கொண்டிருப்பார்கள். மக்களின் ஆதரவு கிடைக்கும்.
- பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும், ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
- கோபம் அதிகம் வராது, அதே சமயத்தில் கோபம் வந்தாலும் அதிக நேரம் நீடிக்காது. சந்தேக குணம் அதிகம் உள்ளதால் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டார்கள். வாய்ப்புகள் இவர்களை தேடி வரவேண்டும் என்று நினைப்பார்கள்.
- வாழ்க்கையில் விரைவாக முன்னேறுவதற்கு பதட்ட உணர்வையும், சோம்பேறி தனத்தையும் விட்டொழிக்க வேண்டும். இவர்கள் மிகவும் Soft-ஆன Nature உடையவர்கள் என்பதால் தந்திரம் எதுவும் வேலைக்காகாது.
பிறந்த தேதி பலன்கள் – Astrology by Date of Birth in Tamil
- 3, 12, 21, 30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் கடின முயற்சி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள். அழகு சாதனத்தின் மேல் நாட்டம் இல்லாதவர்கள்.
- பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசை உடையவர்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள். இவர்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுவார்கள்.
- பிறரிடமிருந்து மதிப்பும், மரியாதையும் எதிர்பார்ப்பார்கள். நேர்மையான குணம் உடையவர், பொய் சொன்னால் பிடிக்காது. மற்றவர்கள் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
Date of Birth Astrology in Tamil Name:
- 4, 13, 22, 31 எண்களில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் புதுமையை எதிர்பார்ப்பார்கள். பிரச்சனைளை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை உடையவர்கள். தனக்கு மற்றவர்கள் செய்த நன்மைகள், தீமைகள் இரண்டையும் மறக்காதவர்.
- இவர்களுடைய பேச்சின் மூலம் மற்றவர்களை எளிமையாக கவருவார்கள். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குகளை கொண்டவர்கள்.
- ஒருவரை போற்றவும், தூற்றவும் இவர்களால் முடியும். கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். புதிய முடிவுகளை விரைவாக எடுத்து விடுவார்கள்.
- இரகசியங்களை பாதுகாக்க மாட்டார்கள், ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து புலம்புவார்கள், மனதில் கவலை இருந்து கொண்டே இருக்கும்.
பிறந்த தேதி பலன்கள்:
- 5, 14, 23 தேதியில் பிறந்தவர்களின் குண நலன்கள், எப்போதும் புதிய சிந்தனையை வளர்த்து கொள்ளும் குணம் கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகவும், மக்களை எளிதில் கவரும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- நட்பிற்கு மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள், அதனால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகம். தன்னை அழகுபடுத்தி கொள்ள விரும்புவார்கள்.
- எந்த துறையில் வேலை செய்தாலும் தனது கால்தடத்தை பதிக்கும் தன்மை கொண்டவர்கள். அதிகம் சாப்பிடுவார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் தன்மை உடையவர்கள். சமாதான பறவை போன்று அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிமையாக தீர்வு கொடுப்பார்கள்.
- இலட்சியங்களில் இருந்து சிறிதும் மனம் தளரமாட்டர்கள், பிறர் செய்த நன்மையை மறக்காதவர், அதே சமயத்தில் மற்றவர் செய்த துன்பத்திற்கு பழிவாங்கும் குணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். அங்கீகாரம் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும்.
Date of Birth Astrology in Tamil Name:
- 6, 15, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் போர்க்கள பூமிக்கு சென்றால் கூட அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். இசை, நடனம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
- இவர்களின் மனது எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். வித்தியாசமாக மற்றும் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
- நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்தை மேம்படுத்த கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பொருளாதார நிலை எப்பொழுதும் இவர்களுக்கு உயர்வானதாகவே இருக்கும்.
- மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர்களாக இருப்பார்கள். அதிக நினைவாற்றல் திறன் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மனங்களை கவரக்கூடிய பேச்சுத்திறனை கொண்டிருப்பார்கள்.
- உணவுக்காக அதிகம் செலவு செய்வார்கள், பயனில்லாமல் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். இவர்கள் சற்று முரட்டுக்குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
- கவிதை எழுதுவது, கதை எழுதுவது, சினிமா போன்ற விஷயங்களுக்கு தங்களது நேரத்தை செலவழிப்பார்கள்.
பிறந்த தேதி பலன்கள்:
- 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கட்டுக்கடங்காதவர்களாக இருப்பார்கள். செல்வம் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்.
- இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள். இளமை காலத்தில் ஒரு சிலருக்கு வறுமை இருக்கலாம் ஆனால் வளர்ந்த பின்பு இவர்களின் காலம் வசந்த காலமாக இருக்கும்.
- ஆடம்பரத்தை அதிகம் விரும்ப மாட்டார்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், தங்களது கடமையில் கவனமாக இருப்பார்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து போராடுவார்கள்.
- மற்றவர்களை பார்த்து பொறாமை பட மாட்டார்கள். பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
- குறைந்த நட்பு வட்டாரத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். நிறைய பொருட்கள் வாங்குவார்கள் ஆனால் எதையும் உபயோகப்படுத்த மாட்டார்கள்.
Astrology by Date of Birth in Tamil:
- 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுய நலமில்லாமல் வாழக்கூடியவர்கள். விடாமுயற்சி கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் எதிரிக்கு கூட தக்க சமயத்தில் உதவுபவர்களாக இருப்பார்கள்.
- கடமை மற்றும் பொறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள். பெரிய செயல்களையெல்லாம் எளிமையாக முடிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் பார்வையில் எப்போதும் கனிவு இருக்கும், ஏழை மக்களுக்கு எப்போதும் உதவி செய்வார்கள். பிரச்சனைகளை ஒரு கை பார்த்து விடலாம் என்ற மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- பழையதை மறக்காதவர்கள், மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் துணிந்து செய்து முடிப்பார்கள்.
பிறந்த நாள் பலன்கள்:
- 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனித்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
- எடுத்த வேலையை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். நண்பர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சவால்களை எளிமையாக செய்து முடிக்கும் திறமை உடையவர்களாக இருப்பார்கள்.
- இவர்களுக்கு துணிச்சல் அதிகம். எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அதில் தங்களின் திறமையால் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- முன்கோபம் உடையவர்களாகவும், அவர்கள் மீது தவறு இருந்தால் அதனை உடனே ஒத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் கஷ்டப்பட்டாலும், வருங்காலத்தில் தங்களின் முயற்சியால் ஒரு சிறந்த இடத்தை அடைவார்கள்.
- எதிலும் சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். சிறிது அவசர குணம் கொண்டவர்கள், பிடிவாத குணம் இயற்கையாகவே உண்டு.
ஏஞ்சல் எண் அர்த்தம் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement