புரட்டாசி மாதத்தில் கடன் கொடுத்தீங்க அவ்வளவுதான்..!

puratasiyil kadan in tamil

புரட்டாசி மாதம் செய்ய கூடாதவை

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! பொதுவாக ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொன்று சொல்லும். அதாவது செவ்வாய்க்கிழமை கடன் வாங்க கூடாது. வெள்ளிக்கிழமை அரிசி கொடுக்க கூடாது. விளக்கு வைத்த நேரத்தில் இட்லி மாவு, ஊசி, தீக்குச்சி போன்றவை கொடுக்க கூடாது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. இது போல் புரட்டாசி மாதம் முழுவதும் சில செயல்களை செய்தால் கஷ்டம் ஏற்படுமாம் அது என்னவென்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ புரட்டாசி மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம், செய்ய கூடாது என்று தெரியுமா.?

கடன் வாங்க கூடாது:

புரட்டாசி மாதம் தெய்வ வழிபாட்டிற்குரிய மாதமாக இருக்கும். அதனால் இந்த மாதத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இந்த தவறினை மட்டும் செய்விடாதீர்கள். இதை எப்படி கடைபிடிக்க என்று யோசிப்பீர்கள். ஆனால் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஏன் கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

ஏன் கடன் வாங்க கூடாது.?

கடன் வாங்குவது சகஜம் தான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீர் செலவுக்காக பணம் கடனாக கேட்பார்கள். கடன் வாங்குபவர்கள் எதற்காக வாங்குவார்கள் என்று தெரியாது. ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் கடவுள் வழிபாடுகளுக்கும், முன்னோர்களுக்கான வழிபாடுகளும் நடத்துவார்கள். கடன் வாங்குபவர்கள் இது போன்ற தெய்வ வழிபாடுகளுக்கு கடன் வாங்கினால் பாவம் வந்து சேரும்.

பொதுவாக கடவுளுக்கு நாம் எந்த காரியம் செய்தாலும் அவர்களின் பணத்தால் செய்ய வேண்டும். கடன் வாங்கி செய்தால் எந்த பலனும் இருக்காது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

இதுபோன்று கடன் வாங்கி கடவுளுக்கு செய்தால் அவர்களுக்கு எந்த பாவமும் இல்லை. கடன் கொடுப்பவர்களுக்கு தான் பாவம் வந்து சேரும். அதனால் நீங்கள கடவுளுக்கு எந்த காரியம் செய்தாலும் உங்களிடம் உள்ள பணத்தை வைத்து செய்யுங்கள். கடன் வாங்கி செய்ய வேண்டும் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை.

கடன் வாங்கி கடவுளுக்கு செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போவதை விட உங்களுக்கு கடன் கொடுத்தவர்களுக்கு பாவங்கள் வந்து சேரும். அதனால் இந்த மாதத்தில் கடன் வாங்குவதயும் தவிர்த்து விடுங்கள். கடன் கொடுப்பதையும் தவிர்த்து விடுங்கள்.

 

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்