புரட்டாசி மாதத்தில் விரதம் எடுப்பதின் உண்மை வரலாறு தெரியுமா..!

purattasi viratham story in tamil

புரட்டாசி விரதம் தோன்றிய உண்மை வரலாறு

பொதுநலம்.காம் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றய பதிவில் நாம் பார்க்க போவது ஒரு ஆன்மிக தகவல்தான். அது என்னவென்றால் நம்மில் பலரும் புரட்டாசி மாதத்தில் விரதம் மேற்கொள்ளுவோம் ஆனால் இந்த விரதம் மேற்கொள்ளுவதற்கான உண்மை வரலாறு உங்களுக்கு தெரியுமா..! தெரிந்தால் சரி இல்லையென்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

 

புரட்டாசி மாதத்தில் விரதம் எடுப்பதற்கான உண்மை வரலாறு:

பொதுவாக புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கு உகந்த மாதமாக கருதி வழிபாடு நடத்தி வருகின்றோம். ஆனால் அந்த பெருமாள் வழிபாட்டிற்கு சனிபகவான்தான் காரணம் என்று உங்களுக்கு தெரியுமா.புரட்டாசி மாதம்யென்றால் திருமாலை வழிபடுவதற்கு உகந்த மாதம் என்று சொல்லிதான் காலம் காலமாக வணங்கி வந்திருப்போம் ஆனால் அதுதான் இல்ல அதிசக்தியான பார்வதிதேவியையும் சிவனையும் வழிபடுவதற்கு இந்த மாதம்தான் உகந்த மாதம்.

சனிதோஷம் நீங்குவதற்கு பெருமாளை ஏன் புரட்டாசில் வணங்கவேண்டும் என்றும் இப்படி புரட்டாசில் நடந்த பல அதிசயங்களையும் அதிலும் பெருமாள் வாசம் செய்யும் திருமலையில் திருமால் என்னெல்லாம் அதிசயங்களை செய்திருக்கிறார் என்றும்.மேலும் புரட்டாசி மாதம் ஏன் இவ்வளவு சிறப்புவாய்ந்தது என்றும் பல சிறுகதைகள் கூறப்படுகிறது. அவற்றை பார்ப்போமா..!

நீங்க புரட்டாசி விரதம் இருக்கீர்கள் என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.மேலும் புரட்டாசில் பெருமாளுக்கு விரதம் இருக்குறதுடன் மற்ற எந்ததெந்த தெய்வங்களுக்கெல்லாம் விரதம் எடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை முன்னிறுத்தி வழிபட்டு வந்தாலே அந்த தெய்வத்துடைய அருள் முழுமையாக நமக்கு கிட்டும் என்று நம்பப்பட்டுவருகிறது. அந்தவகையில் ஒரு மாதம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நோக்கி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் அந்த தெய்வத்துடைய அருள் முழுமையா கிடைக்குமா. அந்தவகையில் காக்கும் கடவுளான பெருமாலிற்கு உகந்த மாதமாக இந்த புரட்டாசி மாதம் அமைந்திருக்கு ஏன் இந்த புரட்டாசி மாதம் இவ்வளவு சிறப்பு நிறைந்தது அதிலும் குறிப்பா சனிக்கிழமைனு தெரிந்துகொள்ளாம்.

பத்மாவதித்தாயாரை கரம்பிடிக்க பெருமாள் ஸ்ரீனிவாசனை பெருமாள் திருமலையில் அவதாரம் எடுத்தது புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் தான் ஏன் சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்கிறார்கள் என்றால் சனிபகவான் விஷ்ணுகிட்ட இரண்டுமுறை எல்லாரும் வெறுத்து ஒதுக்குகின்ற சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக மாற வேண்டும் என்று வரம் பெற்றிருக்கின்றார்.

ஹிரணியன் ஹிரணியசுப்புடைய சகோதரி ஹோலிகா துய்ப்ரயுகத்தில் விஷ்ணுபகவான் கண்ணான பிறந்துருக்கிறதை தெரிந்துகொண்டு அவரை கொள்ளுவதற்கு முயிற்சி செய்வாள் அப்பொழுது சனிபகவானின் பார்வை பட்டு ஹோலிகாஎரிந்து விடுவாள். அப்போ சனிபகவான் கிருஷ்ணருகிட்டே வாங்கிய வரத்தின்படி சனிக்கிழமை விஷ்ணுபாகவனிற்கு உகந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அடுத்து கலியுகத்தில் ஒருநாள் சனிபகவனிடம் நாரதர் நீ இந்த உலகத்தில் ஏங்குவோனுமுன்னாலும் உன்னுடைய சக்தியை உபயோகித்து யாரை வேண்டுமென்றாலும் துன்புறுத்தலாம் ஆனால் திருமலைக்கு சென்றுவிடாதே அவ்வளவுதான் என்று சனிபகவானை தூண்டிவிடும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார் உடனே சனிபகவான் அது என்னடா திருமலையின் சக்தி என்று திருமலையின் மீது கால்வைத்த அடுத்த நொடியே சனிபகவான் பயங்கரமா தூக்கிவீசப்பட்டிருக்கார்.

திருமலையில் யார் இருக்கிறது என்று தெரிந்தும் மற்றவர்களை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடுநடுங்கி திருமாலிடம் மன்னிப்பு வேண்டிருக்கிறார். கோபம்கொண்ட திருமால் சனிபகவனிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தருகளுக்கு நீ எந்த துன்பத்தையும் தரக்கூடாதுஎன்ற நிபந்தனையுடன் மன்னிப்பு தருகிறார் சனிபகவானும் இதற்கு சம்மதிச்சிருக்கார் பிறகு சனிபகவான் பெருமாளிடம் ஒரு வரமும் கேட்டு வாங்கிருக்கார்.

நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அந்தநாளில் உங்களுடைய பகதர்கள் உங்களை எண்ணி வணங்கினால் அவர்கள் கேட்கும் வரத்தை நீங்கள் தரவேண்டும் என்று சனிபகவான் பெருமாளிடம் வரம் வாங்கியிருக்கிறார். ஆகவே சனிக்கிழமையில் பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

சனிபகவான் பிறந்த இந்த புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள்ளுதீபம் ஏற்றுவதால் சனிதோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த புரட்டாசி மாதத்தில் புதன் பகவானை வணங்குவதற்கு உகந்தது என்யென்றால் சனிபகவனும் புதன் பகவானும் நாண்பர்கள் என்பதாலும் புதன் பகவானின் அதிதேவதையாய் விஷ்ணு இருக்கார்.அதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மிகவும் நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாலிருக்கு மட்டும் உகந்ததாக இல்லாமல் சிவா பெருமாலிருக்கும் உகந்த மாதமாக அமைகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் காலை பொழுதில் சிவா பெருமானை வணங்குவதால் முற்பிறவில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நன்பகலில் சிவா பெருமானை வணங்குவதால் முற்பிறவில் செய்த பாவங்கள் மட்டுமில்லாமல் இந்த பிறவில் செய்த பாவங்களும் கூட நீங்கும் என்று நம்பப்படுகிறது மாலை வேலையானா பிரதோஷ வேலையில் சிவனை வணங்குவதால் ஏழேழு ஜென்மத்தின் பாவங்கள் நீங்குவது மட்டுமில்லாமல் நாம் வேண்டும் வரங்களும் கிட்டுமாம்.

அதே மாதிரி அம்பிகைக்கு உகந்த நவராத்திரி வழிபாடும் இந்த புரட்டாசி மாதத்தில்தான் வரும். சிவா பெருமானின் அருளைப் பெற்றுத்தரும் கேதாரீஸ்வரர் விரதம் வருவதும் இந்த புரட்டாசி மாதத்தில்தான்.புரட்டாசி மாதத்தை பொதுவாக விரத மாதம் என்றுதான் கூறுவார்கள்.

பார்வதிதேவியை தன்னுடைய உடலில் பாதியாக சிவா பெருமான் ஏற்றுக்கொண்டதும் இந்த புரட்டாசி மாதத்தில்தான். எனவே புரட்டாசி மாதத்தில் அம்பிகை வழிபாடு செய்வதும் மிகவும் நன்மையைத் தரும் என்று கூறப்படுகிறது.

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசனம் செய்தால் என்ன பலன்கள்..!

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்