புத்திர தோஷம் நீங்க பரிகாரம்..! | Puthra Dosham Pariharam in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் புத்திர தோஷம் என்றால் என்ன..? அதை நீக்க என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நமக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும் முற்காலத்தில் நாம் செய்த கர்ம வினைகளை கொண்டே நமக்கு ஏற்படுகிறது. புத்திர பாக்கியம் என்பது கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பதாகும். முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைப்படுத்தி இருந்தால், அவர்கள் விட்ட சாபத்தால் இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது.
புத்திர தோஷம் என்றால் என்ன?
ஒருவரின் வம்சத்தை விருத்தி அடைய செய்வது மழலை செல்வம். அதனால் தான் ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கொரு ஒரு ஆணும் வேண்டும் என்பார்கள். ஆனால் புத்திர தோஷம் ஏற்பட்டால் குழந்தை பாக்கியமே இல்லாமல் போகிறது.
புத்திர தோஷம் என்பது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதும், பிறக்கும் குழந்தை உடல் வளர்ச்சியில்லாமல் இருப்பதும், ஊனமுற்று பிறப்பதும் ஆகும்.
முற்பிறவியில் ஆன்மீகவாதிகள், அடியார்கள், மகான்கள் போன்றோரை மதிக்காமல் அவமானப்படுத்தி இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.
ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..! |
குலதெய்வக் குற்றத்தாலோ, அந்தணரை கொன்றாலோ புத்திர தோஷம் ஏற்படும்.
புத்திர தோஷம் என்பது பொதுவாக ஒவ்வொரு ஜாதகத்திற்கும், லக்னத்திற்கும் மாறுபடும். எந்த லக்னமாக இருந்தாலும் 5- ஆம் இடம் தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கிறது.
திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது மிகவும் முக்கியம். அப்படி பார்க்கும் போது புத்திர ஸ்தானமான 5 -ஆம் இடம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு குழந்தை உண்டாவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
புத்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
புத்திர தோஷம் உள்ளவர்கள் வறுமையில் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு, உடை போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும். வயதான முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களிடம் மனம் நிறைந்த ஆசிர்வாதத்தை வாங்க வேண்டும்.
பசுக்களுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். கோவில்களுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வது, மரம் நடுவது, பிறருக்கு உணவளிப்பது, பெற்றோர்களை வணங்குவது, விலங்குகளுக்கு உணவளிப்பது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் புத்திர தோஷத்தை நீங்க செய்யலாம்.
பாம்பை அடித்தால் நாகதோஷம் ஏற்படுமா..? |
ஜாதகர் பிறந்த நட்சத்திரமும், அமாவாசையும் கூடும் ஒரு நாளில் கணவன் மனைவி இருவரும், ராமேஸ்வரம் கடலில் ஓம் நமசிவாய என்று கூறி 21 முறை மூழ்க வேண்டும். பிறகு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை கணபதி ஹோமம் செய்து வழிபட வேண்டும்.
பெண்கள் காலையில் குளித்து விட்டு அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் பாவமும், நோய்களும் தீரும். ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல், குலத்தெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |