Revathi Natchathiram Characteristics in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நாம் இப்படி தான் இருக்கிறோம் என்று கேட்டால் நல்லதும் சொல்ல மாட்டார்கள் கெட்டதும் சொல்லமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒன்று சொல்விட்டு செல்வார்கள். நம்மை பற்றி தெரிந்துகொள்ள நிறைய விதமான விஷயம் உள்ளது உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரம்பம் ஆகிறதோ அதனை வைத்து நீங்கள் எப்படி என்று தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரம்பம் ஆனாலும் நீங்கள் எப்படி என்று தெரிந்துகொள்ள 👉 Pothunalam.com கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். அதனை விட மற்றொரு வழி உள்ளது நீங்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்து நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க தெரிந்துகொள்ளலாம்..!
ரேவதி நட்சத்திரம் பிறந்தவர்களின் குணம்:
♣ நட்சத்திரங்கில் 27 உள்ளது அதில் கடைசியில் உள்ளது தான் ரேவதி நட்சத்திரம் ஆகும். இதனுடைய அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த நட்சத்திரம் மீன ராசிக்குரியது ஆகும். அதேபோல் இது ஒரு பெண் ராசிக்காகவும் கருதப்படுகிறது.
♣ இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால் இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தங்களை மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள்.
♣ அனைவருக்கும் அனைத்து விதத்திலும் நன்மை செய்ய நினைப்பார்கள். இவர்கள் தனக்கு நடந்த விஷயத்தை வைத்து அதனை போல் நீங்கள் இருக்காதீர்கள் என்று சொல்லி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
♣ இவர்களுக்கு பணியில் எந்த முதலீடும் இல்லாமல் இருந்தாலும் இவர்களின் மூளையை முதலீடாக வைத்து தொழிலை முன்னேற்றுவார்கள்.
♣ இவர்கள் பார்ப்பதற்கு அழகான உடல் அமைப்பும் ரசிப்பதற்கு ஏற்ற கண் அமைப்பும் கொண்டவராகவும் இருப்பார்கள்.
♣ இவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இவர் பேச்சாற்றலை வைத்து கவர்ந்து விடுவார்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.
♣ அனைவரின் எண்ணத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி நடந்துகொள்வார்கள். மரங்கள் செடிகள் மீது அதிக பற்று உடையாகவும் விளங்குவார்கள்.
♣ இவர்களுக்கு வயது ஆனாலும் இளமையான தோற்றத்தில் காட்சி அளிப்பார்கள். அழகிய பல்வரிசைகள் முகத்திற்கு அழகை அதிகமாக அளிக்கும்.
♣ உறவினர்களுடன் பழகுவதை விட அந்நியர்களுடன் அன்புடன் பழகுவார்கள். அதிகமான நம்பிக்கையும் அவர்கள் மீது வைத்திருப்பார்கள்.
♣ இவர்கள் மனது சுத்தமாக இருக்கும். மனதிற்குள் ஒன்று பின்புறம் ஒன்று பேசவே மாட்டார்கள் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுவார்கள்.
♣ பெற்றோர் பெரியவர்களுக்கு அதிக மரியாதையை கொடுப்பார்கள். இவர்களுக்கு பொருளதார ரீதியாக கஷ்டம் இருக்காது அதனால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
♣ இவர்களுக்கு கலை மீதி அதிகம் ஆர்வம் இருக்கும். இவர்கள் மிகவும் தைரிய சாலியாக இருப்பார்கள் அதேபோல் இவர்கள் எடுக்கும் செயலில் வெற்றியை மட்டுமே அடைய வேண்டும் என்று நினைப்பார்கள்.
♣ அரசியலில் அமைச்சர் பதிவியை வகிப்பார்கள். சமுதாயத்தில் பேர் புகழ் என வளம் வருவார்கள். இவர்களின் சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இருப்பார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 மீன ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |