மோதிரம் போடக்கூடாத விரல்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் எந்த விரலில் மோதிரம் அணியக்கூடாது என்று பார்க்க போகிறோம். பொதுவாக அனைவரும் மோதிரம் அணிவது வழக்கம். அதனால் அந்த காலத்தில் சில விரல்களில் மட்டுமே மோதிரம் போடவேண்டும் என்று சொல்வார்கள். சிலர் மட்டும் மோதிரத்தின் மீது ஆசை இருப்பதால் நிறைய மோதிரத்தை ஒரே விரலில் அனைத்தையும் அணிந்து கொள்வார்கள். இந்த காலத்தில் அப்படி எதுவும் இல்லை அனைத்து விரல்களிலும் மோதிரத்தை அணிந்து கொள்கிறார்கள் மோதிரம் அணிவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது அதனை இப்போது தெரிந்துகொள்வோம் வாங்க..!
மோதிரம் போடக்கூடாத விரல்:
பெரும்பாலானோர் இடது கையில் மோதிரம் அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக நிச்சயதார்த்த மோதிரத்தை இடது கையில் அணிவது அவர்களின் இதயத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும்.
நம்முடைய வலது கை உடல் செயல்பாடுகளுடனும், இடது கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது.
அதேபோல் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மோதிரம் அணிவதன் விரல் ஆனது மாறுபடும். கட்டை விரலின் மோதிரம் அணிவது ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வல்லமை கொண்டது. கற்கள் பாதிக்காத மோதிரத்தை அணிவது விரலில் தோற்றத்தை மாற்றாது.
ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிந்தால் ஒவ்வொருவரின் ஆளுமை திறனும் அதிகரிக்கும். சிறந்த வாழ்க்கையயை தேடுபவர்கள் இந்த விரலில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். அதேபோல் அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கும்.
நடு விரலில் மோதிரம் அணிந்தால் அவர்களுக்கு காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். உங்களுக்கு வசீகரிக்கும் தன்மையை அதிகரிக்கும்.
மோதிர விரலில் மோதிரம் அணிந்தால் அணிபவர்களுடைய வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்கும். மோதிர விரலில் தான் அணிவது வழக்கம் அணியும் மோதிரம் தங்கமாக இருக்கவேண்டும்.
சுண்டு விரலில் மோதிரம் அணிவது ஒருவருடைய உணர்வுகளை அதிகரிக்கும். அணியும் மோதிரம் தங்கம் அல்லது செம்பு மோதிரத்தை மட்டும் அணியவும். தங்கம் மோதிரத்தை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் அது கஷ்டத்தை தரும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
இந்த ராசிக்காரர் தங்கம் மோதிரம் அணிந்தால் அவருடைய வாழ்வில் பல நன்மைகள் உண்டாகுமாம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |