சாய்பாபா மந்திரம் | Sai Baba 108 Mantra
ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருமே ஒவ்வொரு தெய்வத்தின் மீது அதிக பக்தி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவதால் மனிதனாகிய அனைவருக்கும் மனதில் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் அனைத்திருந்து காத்து அவர்களை சரியான வழியில் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் மனிதனர்கள் கடவுளை வணங்குவதற்கு மறப்பதில்லை. அதேபோல் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவதற்கு சில மந்திரங்கள் மற்றும் போற்றிகள் இருக்கும். அதுபோல தான் சீரடி சாய் பாபாவிற்கும் 108 போற்றி இருக்கிறது. அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இதனை மனதில் கொண்டு சாய் பாபாவை நினைத்து இந்த 108 போற்றிகளை படித்தால் மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் நினைத்த அனைத்தும் நிறைவேறும். ஆகவே அதனை இப்போது பார்க்கலாம்.
Sai Baba 108 Mantra:
♦ ஓம் சாயிநாதனே போற்றி
♦ ஓம் சீரடி உறைந்தவனே போற்றி
♦ ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
♦ ஓம் அன்பு வடிவானவனே போற்றி
♦ ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
♦ ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
♦ ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி
♦ ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி
♦ ஓம் உலகைக் காப்பவனே போற்றி
♦ ஓம் உவகை தருபவனே போற்றி
♦ ஓம் உளமதை அறிபவனே போற்றி
♦ ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
♦ ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
♦ ஓம் விட்டலின் வடிவே போற்றி
♦ ஓம் சுவாமியே போற்றி
♦ ஓம் அப்பனே போற்றி
♦ ஓம் பாபா போற்றி
♦ ஓம் பாதமலரோன் போற்றி
♦ ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
♦ ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
♦ ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
♦ ஓம் ராமானந்த சீடனே போற்றி
♦ ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
♦ ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
♦ ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி
♦ ஓம் அபயம் தருபவனே போற்றி
♦ ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
♦ ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
♦ ஓம் நற்குணனே போற்றி
♦ ஓம் விற்பபன்னனே போற்றி
♦ ஓம் பொற்பாதனே போற்றி
♦ ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
♦ ஓம் மகத்துவமானவனே போற்றி
♦ ஓம் மங்கள ரூபனே போற்றி
♦ ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி
♦ ஓம் நீதியை புகட்டினன் போற்றி
♦ ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
♦ ஓம் நிறை குணத்தோனே போற்றி
♦ ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
♦ ஓம் மறை அறிந்தவனே போற்றி
♦ ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
♦ ஓம் மாதவத்தோனே போற்றி
♦ ஓம் அபயக் கரத்தோனே போற்றி
♦ ஓம் அமரர்க்கோனே போற்றி
♦ ஓம் அகம் உறைபவனே போற்றி
♦ ஓம் அசகாய சூரனே போற்றி
♦ ஓம் அசுர நாசகனே போற்றி
♦ ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
♦ ஓம் அணுவணுவானவனே போற்றி
♦ ஓம் அமுத விழியோனே போற்றி
♦ ஓம் அரங்க நாயகனே போற்றி
♦ ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
♦ ஓம் அருவமானவனே போற்றி
♦ ஓம் ஆதாரமானவனே போற்றி
♦ ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
♦ ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
♦ ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
♦ ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
♦ ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
♦ ஓம் இச்சா சக்தியே போற்றி
♦ ஓம் கிரியா சக்தியே போற்றி
♦ ஓம் ஞான சக்தியே போற்றி
♦ ஓம் இமையவனே போற்றி
♦ ஓம் இங்கித குணத்தினனே போற்றி
♦ ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
♦ ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
♦ ஓம் இருள் நீக்குவோனே போற்றி
♦ ஓம் ஈகை கொண்டவனே போற்றி
♦ ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
♦ ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
♦ ஓம் உலகைக் காப்பவனே போற்றி
♦ ஓம் உமாமகேசுவரனே போற்றி
♦ ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
♦ ஓம் உவகை அளிப்பவனே போற்றி
♦ ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி
♦ ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
♦ ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
♦ ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
♦ ஓம் ஐயம் களைபவனே போற்றி
♦ ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
♦ ஓம் ஓங்கார ரூபனே போற்றி
♦ ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
♦ ஓம் ஓளடதமானவனே போற்றி
♦ ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி
♦ ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
♦ ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
♦ ஓம் சூதறுப்பவனே போற்றி
♦ ஓம் சூனியம் களைபவனே போற்றி
♦ ஓம் செம்மலரடியோனே போற்றி
♦ ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
♦ ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
♦ ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
♦ ஓம் சச்சிதானந்தனே போற்றி
♦ ஓம் பண்பின் வடிவானவனே போற்றி
♦ ஓம் பலம் அருள்வோனே போற்றி
♦ ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
♦ ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி
♦ ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
♦ ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
♦ ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
♦ ஓம் அன்னை வடிவினனே போற்றி
♦ ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
♦ ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
♦ ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
♦ ஓம் மகாயோகியே போற்றி
♦ ஓம் மகத்துவமானவனே போற்றி
♦ ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
♦ ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |