கும்ப ராசியில் இணையும் சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா.?

கும்ப ராசி சனி பகவான்

ஆண்டு தோறும் சனி பெயர்ச்சி மற்றும் குறு பெயர்ச்சி போன்றவற்றை நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பெயர்ச்சியின் காரணமாக நிறைய மாற்றங்கள் ஆண்டு தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சனி பெயர்ச்சியில் சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். அதுமட்டும் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் கும்ப ராசிக்கு வருகிறார். அத்தகைய கும்ப ராசியில் சூரிய பகவானும் இருப்பதால் அவருடன் இணைந்து சில மாற்றங்களை அளிக்க உள்ளார். ஆகவே அத்தகைய மாற்றம் அனைத்தும் நன்மை தரக்கூடியதாக இருப்பதால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. எனவே அது எந்தந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ராகு கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்.. 

சனி பார்வை பலன்:

கும்ப ராசியில் இருந்து கொண்டே சனி பகவான் சூரிய பகவானுடன் சேர்ந்து சில ராசிகளின் மீது பார்வை இடுகிறார். அப்படி பார்வை இடும் ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசி:

மேஷ ராசி

ராசியில் முதல் ராசியான மேஷ ராசியில் பதினொன்றாம் வீட்டின் மீது சனி பகவான் பார்வை வைப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் வந்து சேரும். ஏனென்றால் 11-வது வீடு லாபம் ஸ்தானமாக இருப்பதால் தொழில் ரீதியாக  நல்ல முன்னேற்றம் இருக்கும், கடன் பிரச்சனை தீரும் மற்றும் உயர்ந்த பதவிகள் போன்றவற்றை கிடைத்து ஜாக்பாட் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மிதுன ராசி:

மிதுனராசி

இரண்டு பெண்களை அமைப்பாக கொண்டது தான் மிதுன ராசி. இத்தகைய மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிந்த நிலையில் அடுத்த பெரிய ஒரு வாய்ப்பாக சனி பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தர உள்ளார்.

மேலும் இதுநாள் வரையிலும் இருந்த கஷ்டங்கள் நீங்கி பண வரவு அதிகரிக்கும், வியாபாரத்தில் நல்ல நிலை காணப்படும். ஆகையால் இனி வரும் காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலமாக உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

துலாம் ராசி:

துலாம் ராசி

சனியின் பார்வை துலாம் ராசியின் மீது படுவதனால் இனி வரும் காலமானது சாதகமான நாளாக அமைகிறது. அதுமட்டும் இல்லாமல் ரொம்ப நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சனியின் நட்சத்திர பெயர்ச்சியில் கொஞ்சம் கவனமா இருக்கனுமாம்.. உங்களுடைய ராசி இதுல இருக்கானு தெரியுமா.. 

ரிஷிப ராசி:

ரிஷிப ராசி

காலச்சக்கரத்தில் 2-வதாக அமைந்துள்ள ரிஷிப ராசிக்காரர்களுக்கு இத்தகைய சனி பெயர்ச்சி ஆனது வெற்றியினை அளிக்க உள்ளதாக காணப்படுகிறது. மேலும் தொழில் ரீதியாக எடுத்த காரியம் வெற்றி அடையும், நிதிநிலை அதிகரித்து யோகம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் நிறைய புது புது வாய்ப்புகள் தொழில் ரீதியாக தேடி வரும் என்றும் சொல்லப்படுகிறது.

தனுசு ராசி:

தனுசு ராசி

ராசியில் 9-வதாக அமைந்துள்ளது தான் தனுசு ராசி. இத்தகைய தனுசு ராசிக்காரர்கள் இதுநாள் வரையிலும் நிறைய சவலைகளை சந்தித்து இருப்பார்கள். அவற்றை எல்லாம் நீங்கி நல்ல காலம் பிறப்பதற்கான வாய்ப்புகள் சனியின் பார்வை படுவதால் வர உள்ளது. ஆகையால் இனி மகிழ்ச்சி நிறைந்த காலமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கப்போகிறது.

கன்னி ராசி:

கன்னி ராசி ஆண்கள்

 

சனியின் பார்வை கன்னி ராசியில் உள்ள 6-வது வீட்டில் படுவதால் இனி வரும் காலமானது கன்னி ராசிக்காரர்களுக்கு யோகத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியினை அளிக்ககூடியதாக இருந்தாலும் கூட யோசித்து செய்யப்பட வேண்டும். மேலும் தீராத கடனும் தீர்ந்து அதிர்ஷ்டம் அதிகரித்து காணப்படும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்