வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான் | Sani Vakra Peyarchi 2021

சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி பலன்கள் – அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள் எது? | sani vakra peyarchi 2021

Sani Vakra Peyarchi 2021:- சனிபகவான் பொதுவாக மெதுவாக நகரும் கிரகம் என்று அனைவர்க்கும் தெரிந்திருக்கும். சனி பெயர்ச்சியின் போது ஒரு ராசியில் இரண்டரை வருடத்திற்கு மேல் இருந்து நல்ல பலன்கள் மற்றும் பாதிப்புகளை தரக்கூடிய கிரகம். இந்த நிலையில்  மகர ராசியில் பயணிக்கும் சனிபகவான் விரைவில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். அதாவது சனி வக்ர பெயர்ச்சி மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி  அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி வரை சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

ஆகவே இந்த காலகட்டத்தில் வக்ர சனி பெயர்ச்சியின் போது 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை வழங்க இருக்கிறார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா.

Sani Vakra Peyarchi 2021 Date மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி  அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி வரை

 

Sani Peyarchi Vakra Palangal

மேஷம் – Sani Vakra Peyarchi 2021 Mesham: 

Mesham

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம். கடந்த காலத்தில் கிரக நிலைகள் தங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையாக இருந்ததால், பல கஷ்டங்கள், வேதனைகள், வலிகள், மன அழுத்தங்கள் போன்றவற்றை ஏராளமாக சந்தித்திருப்பீர்கள்.

ஆனால் இந்த சனி வக்ர பெயர்ச்சி தங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது கடந்த சில வருடங்களாக தங்களுக்கு இருந்து வந்த வேலையில் சங்கடங்கள், வேலையில் இழப்புகள், பிடிக்காத இடத்தில் பணிபுரிவது, தொழில் சரிவு, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி இனி வருகின்ற காலம் மேஷம் ராசி அன்பர்களுக்கு மிகவும் நல்லதாகவே இருக்கும்.

மேஷம் ராசியின் 10-ம் இடத்தில் சனி இருப்பதினால் நல்லது, கெட்டது ஆகிய இரண்டு பலன்களையும் இந்த வக்ர சனி பெயர்ச்சியின் போது தங்களுக்கு சனிபகவான் வழங்குவார்கள். அதாவது 10ம் இடம் என்பது ஜாதகம் கட்டத்தில் தொழில் ஸ்தானம் என்பதினால் வருமானம் தங்களுக்கு ஓரளவு குறைவில்லாமல் வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். வரும் பணம் தங்களுடைய கடன் தொகையை அடைப்பதற்கே சரியாக இருக்கும்.

இருப்பினும் குருபகவான் அதிசாரம் பெற்று தங்கள் ராசியில் 11-ம் இடமான லாபம் ஸ்தானத்தில் இருப்பதினால் தங்களுடைய தொழில் நன்கு வளர்ச்சியடையும். வேலை கிடைக்காதவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகும்.

ரிஷபம் – Sani Vakra Peyarchi 2021 Rishabam:

Rishabam

கடந்த மூன்று வருடங்களாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையான விஷயங்களிலும் அதிக தடைகள், தாமதங்கள், அதிஷ்டம் இல்லாத நிலைகளை கொடுத்துக்கொண்டிருந்த அஷ்டம சனி எனப்படும் 8-ம் இடத்தில் சனி கடந்த ஆண்டு சனி பெயர்ச்சி மூலம் விலகியதால் தங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைந்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வக்ர சனி பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி மூலம் நன்மைகள் அதிகம் நடக்க இருக்கின்றது.

குறிப்பாக இந்த வக்ர சனி பெயர்ச்சியின்போது 12 ராசிகளில் சிரமங்கள் நீங்கி நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசிகளில் ரிஷபம் ராசி அன்பர்களும் இருக்கின்றனர். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற அனைத்து காரியங்களும் இந்த பெயர்ச்சியின் போது கைகூடும். இருப்பினும் தங்கள் பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சனி வக்ரம் பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். தங்கள் பிள்ளைகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்:-

Midhunam

வாழ்க்கைத்துணையை குறிக்கும் 7-ம் இடத்தில் சனி அமர்ந்து மிதுனம் ராசி கணவன் மனைவிக்குள் இடையே கருத்துவேறுபாடுகள், பிரிவு, மனசங்கடங்களை கொடுத்து கொண்டிருந்த சனி பகவான் தற்பொழுது 8-ம் இடத்தில் இருந்து அஷ்டம சனியாக தற்பொழுது வக்கிரமாகிறார் சனிபகவான். ஆகவே மிதுனம் ராசிகாரர்களுக்கு சென்ற முறை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் இப்பொழுது இருக்காது.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம் தங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மையை கொடுக்கும். வேலை தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். சனி எட்டுக்குடையவர். எட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது வக்ரமடைகிறார். கூட்டுத்தொழில் நன்மையை கொடுக்கும். முன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்பட வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

கடகம்:

Kadagam

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். கண்டச்சனியாக இருந்து சில மனசங்கடங்களை கொடுத்து வந்த சனி பகவான் இப்பொழுது வக்ர சனி பெயர்ச்சியினால் தங்களுடைய பிரச்சனைகளை படிப்படியாக குறைப்பார். பகைவர்களினால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தங்களுக்கு மறைமுகமாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கடகம் ராசி அன்பர்களுக்கு இருந்து வந்த காரியத்தடைகள் அனைத்தும் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக நடந்து முடியும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம் – Sani Vakra Peyarchi 2021 Simmam:

Simmam

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சியின் போது சனிபகவான் எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதை பற்றி பார்ப்போம். கடந்த  காலங்களில் 5-ம் இடத்தில் சனிபகவான் அமர்ந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் இல்லாத நிலைமைகளையும் சிலவகையான சாதகமற்ற பலன்களையும் கொடுத்த சனிபகவான், தற்பொழுது 6-ம் இடத்தில் இருந்து வக்ரப்பெயர்ச்சி ஆகிறார். இது சிம்ம ராதிகாரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கக்கூடிய காலகட்டமாகும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உங்கள் நிதி நிலமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி:

Kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். இதுவரை தங்களுக்கு இருந்து வந்த மனக்கஷ்டகள், மன உளைச்சல்கள், குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள், கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள், காரிய தடைகள் அனைத்தும் இந்த வக்ர சனி பெயர்ச்சியினால் நீங்கி தங்களுக்கு இனி மன நிம்மதி உண்டாகும்.

தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்களுக்கு மற்றவர்களினால் இருந்து வந்த இடையூறுகள் மற்றும் பகைவர்களினால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியம் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படலாம். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். கடன் பிரச்சனை தீரும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

துலாம் – Sani Vakra Peyarchi 2021 Thulam:-

Thulam

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 4-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதாவது அர்த்தாஷ்டம சனியால் துலாம் ராசிக்காரர்கள் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். இனி  இந்த வக்ர சனி பெயர்ச்சியினால் தங்களுக்கு இதுவரை ஏற்பட்டிருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இந்த பெயர்ச்சி தங்களுக்கு இருக்கும்.

ஆகவே மே 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரையிலான இந்த கால கட்டத்தில் நீங்க உங்களுக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அம்மா வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் இப்போதைக்கு அவற்றை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:-

Viruchigam

இந்த வக்ர சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்றாக இருக்கும். தங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தங்களுடைய கடன் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். தங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றியில் முடிவடையும். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். தனுசு ராசிக்காரர்களுக்கு இது 7 1/2 சனியில் பாத சனி காலமாகும். ஆகவே உடல் நல பிரச்சனைகள், வீண் செலவுகளினால் மன உளைச்சல்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சனிபகவான் வக்ரமடைகிறார். எனவே ஆட்சி பெற்ற சனி வக்ரமடைந்தால் இன்னும் அதிகம் பாதிப்புகள் ஏற்படுமோ என்று நினைப்பீர்கள்.

அதுதான் கிடையாது இந்த பெயர்ச்சியில் தங்களுடைய அனைத்து பாதிப்புகளும் விலகி பல நன்மைகள் நடைபெரும். இருப்பினும் இந்த கால கட்டத்தில் நீங்கள் புதிதாக தொழில் செய்வதை பற்றி யோசிக்கக் கூட வேண்டாம். வீட்டில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் மற்றும் அதிக கவனமாக இருக்கவும். ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்கவும். உங்க கால்கள், பாதங்களில் அடிபட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

மகரம் – Sani Vakra Peyarchi 2021 Magaram:-

Magaramமகரம் ராசிக்காரர்களுக்கு இது ஜென்ம சனி காலமாகும். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படலாம் ஆகவே அதிக கவனம் அவசியம். சனி உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு பண பிரச்சனைகள் வரலாம். உடன் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இந்த கால கட்டத்தில் வேண்டாம். கொடுத்தால் பணம் திரும்ப வராது. வேலை விசயத்தில் கவனம் அவசியம். இருக்கும் வேலையை விட்டு விட்டு இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாம். ஆகவே இந்த காலகட்டம் முழுவதும் மகரம் ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம் – Sani Vakra Peyarchi 2021 Kumbam:-

Kumbam

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை சனி காலமாகும். விரைய செலவுகள் அதிகமாக இருக்கும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரமாக பயன்படுத்துங்கள். ஆடம்பரமாக செலவு செய்வதை முற்றிலும் தவிர்த்து கொள்வது தங்களுக்கு மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு பத்திரமாக இருக்கும்.

பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். சிறுசிறு உடல் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் ஆகவே தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். இந்த காலகட்டத்தில் தேவையின்றி அதிகமாக வெளியில் பயணம் செல்வதை முற்றிலுமாக தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

மீனம்:-

Meenam

இந்த வக்ர சனி பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். மீனம் ராசி அன்பர்களுக்கு இது லாப சனி காலம். ஆகவே சனிபகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவு கிடைக்கும்.

வீண் செலவுகளை குறைத்து கொண்டு சேமிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். தங்களுடைய உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். வெளியிடங்களில் உணவருந்துவதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.

சனி பெயர்ச்சி 2020 – 2023 | சனி பெயர்ச்சி பலன்கள் 2021 | Sani Peyarchi

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்