வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சரஸ்வதி 108 போற்றி | Saraswathi 108 Potri in Tamil

Updated On: September 29, 2025 3:17 PM
Follow Us:
Saraswathi 108 Potri in Tamil
---Advertisement---
Advertisement

Saraswathi 108 Potri in Tamil

பொதுவாக நமது வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும் சுமுகமாகவும் செல்வதற்கு மிகவும் முக்கியமான தேவை எது என்றால் நமது அறிவு, ஞானம் மற்றும் திறமையும் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான அறிவு, ஞானம் மற்றும் திறமையும் நமக்கு அள்ளித்தருபவள் தான் சரஸ்வதி தேவி. இப்படி நமக்கு அனைத்து ஞானத்தையும், அறிவையும் மற்றும் திறமையும் அள்ளித்தரும் சரஸ்வதி தேவியின் மனதை மகிழ்வித்தால் மட்டுமே நமக்கு அவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். அவரின் மனம் மகிழ்வதற்கு அவருக்கு சரியான முறையில் பூஜை செய்ய வேண்டும். அதாவது அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக சரஸ்வதி தேவியின் 108 போற்றிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து சரஸ்வதி தேவியின் அருளையும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

சரஸ்வதி அஷ்டோத்திரம்

சரஸ்வதி 108 போற்றி

Saraswathi 108 Potri Lyrics in Tamil

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

சிவன் அஷ்டோத்திரம்

ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

துர்காதேவி அஷ்டோத்திர வரிகள்

ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்போற்றி

ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி

லட்சுமி அஷ்டோத்திரம்

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி…

சரஸ்வதி போற்றிகள் :

ஓம் அறிவின் வடிவே போற்றி 

ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி 

ஓம்  அட்சமாலை கரத்தாய் போற்றி 

ஓம் அன்ன வாகினியே  போற்றி 

ஓம் ஆசான் வடிவே போற்றி 

ஓம் ஆயக்கலை அருள்வாய் போற்றி 

ஓம் இகபரம் சுகம் தருவாய்  போற்றி

ஓம் இசை வடிவானாய்  போற்றி  

ஓம் அறிவுருவே  போற்றி 

ஓம் கலையரசியே  போற்றி 

ஓம் கலை களஞ்சியமே  போற்றி 

ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

இதுவே சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம்.

சரஸ்வதி 108 போற்றி pdf
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now