பண மழை பெய்யும் ராசிக்காரர்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நாம் பார்க்கபோகிறது என்னவென்றால் சில ராசிகளுக்கு மட்டும் சனி பகவான் நல்ல வழியை காட்டுகிறார். சொல்லப்போனால் ஒரவஞ்சனம் செய்கிறார் என்றும் சொல்லலாம்..! நமக்கு அனைவருக்குமே சனி பகவான் என்றால் மிகவும் பயமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர் நன்மையை செய்வதை விட தீமையை செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல நாம் செய்யும் தவறுகளை நினைத்து நம்மை 30 வருடத்திற்கு 2 வருடம் ஒரு ராசியில் பெயர்ச்சி ஆகி நாம் செய்யும் தவறுகளை சரி செய்யும் விதத்தில் நமக்கு நல்ல புத்தியை கொடுப்பார் எனவும் பெரியவர்கள் சொல்வார்கள்..!
நல்ல காலம் பிறக்கும் ராசிகள்:
சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இதனால் சனிபகவான் நிலை மாறும் என்றாலும் 12 ராசிகளுக்கும் எதோ ஒரு விதத்தில் நன்மையை தீமை இரண்டையும் செய்வார் சனி பகவான். அதில் எதிர் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் சனி பகவான் ராசிகளில் 11 ராசியான கும்ப ராசியில் நுழைகிறார். இதன் படி கும்ப ராசிக்கு முன் இருக்கும் ராசிக்கும் அதேபோல் பின் இருக்கும் ராசிக்கும் கும்ப ராசியை போல் விளைவுகள் அதிகமாக இருந்தாலும்.
மகர ராசியிலிருந்து சனி பகவான் விடுபட்டு கும்ப ராசியில் நிவர்த்தி அடைகிறார். அந்த வகையில் 3 ராசிக்கும் நல்ல மாற்றம் கிடைக்கும். அதில் முக்கியமாக மிதுன ராசி, துலாம் ராசி, தனுசு ராசிக்கும் சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்கும் 2023 ஆம் ஆண்டு நல்ல காலமாக இருக்கும், சனியில் தாக்கம் குறைந்தால் நல்ல முன்னேற்றம் தொழில் கிடைக்கும் அதேபோல் இந்த கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையை பொறுத்தவரையில் நினைத்தது அனைத்தும் நடக்கும் காலமாக இந்த புது வருடம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
துலாம் ராசி:
இந்த வருடம் அதாவது 2022 ஆம் ஆண்டு நிறைய அடிகளை பெற்றுள்ள ராசியில் இதுவும் ஒன்று. அதேபோல் நிறைய செலவுகளை செய்து இருப்பீர்கள் முக்கியமாக தொழிலை தொடங்கி நல்ல முன்னேற்றம் அடையலாம் என்ற எண்ணத்தில் தொடங்கி அதில் சற்று குழப்பம் குறைவு ஏற்பட்டு இருக்கும். ஆனால் 2023 ஆம் ஆண்டு எதிலும் நல்லது நடக்கும். தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றமும் கிடைக்கும்.
மிதுன ராசி:
செவ்வாய்யின் அருகில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது தொழிலில் முன்னேற்றம் அடையும் அதேபோல் மனதில் தன்னம்பிக்கை அதிகமாகும், வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும், போட்டிகள் அதிகமானாலும் மனதில் வலிமை குறையாது, அது அவரை நல்ல வழியில் முன் நிறுத்தும். வீடு வாங்கும் வாய்ப்புகளும் வந்தடையும் முறையாக பயன்படுத்தினால் தொழிலும் நன்றாக இருக்கும்.
மேலும் சனியில் தோஷம் குறையவேண்டுமென்றால் சனிக்கிழமையற்று எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும், ஆலமரத்திற்கு கீழ் கடுகு எண்ணெயில் விளக்கு போடவும்.
இதையும் படித்து விடுங்கள்👉👉 2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |