செவ்வாய் கிழமை அன்று கடைபிடிக்க வேண்டியவை.

sevvai kilamai valipadu

Sevvai Kilamai Valipadu

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் கடன் பிரச்சனைகள் தீர்ந்து  வாழ்க்கையில் நிம்மதியுடனும், பண செழிப்புடனும் இருப்பதற்கு செவ்வாய் கிழமையில் எப்படி வழிபடுவது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக சிலரது வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் இழந்து அதிகமான கடன் சுமைகளுடன் இருப்பவர்களுக்கு, செவ்வாய் கிழமையில் சில வழிபாடுகளை செய்வதன் மூலம் உங்களுடைய சுமைகள் எல்லாம் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி பெறுவதற்கு  இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவை என்னவென்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்:

செவ்வாய் கிழமை அன்று  அன்னம் எதுவும் அருந்தாமல், அம்பிகையை மனதார வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால், நாம் நினைக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியில் வந்து முடியும் என்று ஐதீகம் சொல்லப்படுகிறது.

முருகனுக்கு உகந்த கிழமை செவ்வாய் கிழமைதான், செவ்வாய் கிழமை அன்று மௌன அங்காரா விரதம் இருப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் அனுஷ்டித்தால் யாகம் செய்வதற்கு சமம் என்று  சொல்லப்படுகிறது.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி போன்ற கிழமைகளில் சிலர் நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள், அதிலும் புதன் கிழமையை பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்பவர்களுக்கு, இந்த கிழமையில் அஷ்டமி, நவமி, பிரதமை போன்ற திதிகளில்,  எந்த விதமான நல்ல காரியங்கள் செய்யும் பொழுது சரிப்பார்த்து கொண்டு செய்வது நல்லது.

செவ்வாய் கிழமையில் நல்ல விஷயங்களை செய்வது நல்லது, ஏனென்றால் கிரங்களில் செவ்வாய் ஆனது மங்களக்காரன் என்றும் சொல்லப்படுகிறது. எனவே செவ்வாய் கிழமையும் நல்ல நாளாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்றும் சொல்வார்களாம், செவ்வாய் கிழமை அன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள், வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள் என்றும் சொல்வார்கள்.

செவ்வாய் கிழமை என்ன செய்யக்கூடாது:

செவ்வாய் கிழமை அன்று எந்தவிதமான சம்பவங்களிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது, அப்படி ஈடுபாட்டால் அது தீமையில் வந்துதான் முடியும். இது போன்ற காரணங்களினால் தான் செவ்வாய் கிழமையில் சிலர் விரதம் இருப்பார்கள்.

செவ்வாய் கிழமை அன்று கடன் வாங்குவதே தவிர்ப்பது நல்லது ஏனென்றால் செவ்வாய்கிழமையில் கடன் வாங்கினால் கடன் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.

தங்கத்தை அடகு வைப்பதை தவிர்ப்பது நல்லது, ஆனால் செவ்வாய் கிழமை அன்று தங்கத்தை வாங்கினால், தங்கம் அதிகமாவே சேரும். அதேபோல் செவ்வாய் அன்று வீட்டையும் சாமி இடத்தையும் சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அதேபோல் செவ்வாய் கிழமை அன்று தலைமுடி வெட்டுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் நகம் வெட்டுதல், சேவிங் செய்தல் போன்ற விஷயங்களை  செவ்வாய் கிழமை அன்று தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் கிழமை அன்று வீட்டில் தேவையில்லாத பொருட்களை தூக்கி போடுவதை தவிர்ப்பது நல்லது. இது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதால் செல்வம் தானாகவே சேரும், கடன் பிரச்சனை நீங்கும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal