Sevvai Peyarchi Palangal
நாம் அனைவருக்கும் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு மாதத்தின் பிறப்பின் போது அதனுடைய ராசியினை மாற்றி கொண்டே போகும் என்பதை அறிந்து இருப்போம். அந்த வகையில் செவ்வாய் ஆனது சிம்ம ராசியில் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு செல்கிறது. இத்தகைய பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்த்தை விட மிகவும் அதிர்ஷ்டமான பலன்கள் அமையும் விதமாக உள்ளது. ஆகையால் அது என்னென்ன ராசி என்றும், அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்றும் விரிவாக பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகுது
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்:
கடக ராசி:
ராசியில் 4-வது ராசியாகிய கடக ராசிக்காரர்களின் 3-வது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைய உள்ளார். இத்தகைய பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நேரமாக மாறப்போகிறது.
மேலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைப்பதோடு மட்டும் இல்லாமல் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இத்தகைய பெயர்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கூடி வரும் நிலைமை ஏற்படும்.
மேஷ ராசி:
முதல் ராசியாக உள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆனது வெற்றி அளிக்கும் விதமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி இருந்தாலும் கூட செலவுகள் என்பது கொஞ்சம் அதிகமாக காணப்படும்.
மேலும் பணியிடத்தில் உங்களுக்கான வெற்றி என்பது சரியான நேரத்தில் கிடைக்கும். இதற்கான அடுத்தக்கட்ட நிலையாக நீங்கள் பணி ரீதியாக வெளி ஊருக்கும் செல்லலாம். இது உங்களுக்கு சாதமாக இருந்தாலும் கூட கொஞ்சம் கவனமும், எச்சரிக்கையும் தேவை.
சிம்மத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா சூப்பரா மாற போகுது
விருச்சிக ராசி:
தேள் போன்ற அமைப்பினை கொண்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களின் 11-வது வீட்டில் செவ்வாய் நுழைய இருக்கிறார்.அதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி, தொழிலில் லாபம் மற்றும் வருமானம் அதிகமாக கிடைக்கும் ஒரு நேரமாக இருக்கிறது.
பொருளாதார நிலை முன்பை விட தற்போது அதிகமாக காணப்படும். ஆகையால் வாழ்கையிலும், குடும்பத்திலும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் இவர்களுக்கு மகிழ்ச்சி தான்.
மிதுன ராசி:
மிதுன ராசியில் செவ்வாய் பகவான் நுழைவதோடு மட்டும் இல்லாமல் 7, 10 மற்றும் 11-ஆம் வீட்டினையும் பார்வை இடுகிறார். ஆகையால் இந்த ராசிகர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பண வரவு அதிகமாக இருக்கும். மேலும் அலுவலகத்தில் உங்களின் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தினால் கட்டாயம் வெற்றி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |