சனியின் வக்ர பெயர்ச்சியினால் நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது..

Advertisement

சனி வக்ர பெயர்ச்சி 2023

ஆன்மிகத்தில் சனி பகவான் ரொம்ப முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்றது போல் சனி பகவான் பலன்களை தருகிறார். இதனால் சனி பகவான் தர்மத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் கும்ப ராசியில் வருகின்ற ஜூன் 17-ம் தேதி பெயர்ச்சி அடைந்து நவம்பர் 4-ம் தேதி வரை சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் அபரிமிதமான பலன்களை அள்ளி தர போகிறார். அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சனி பகவான் வக்ர பெயர்ச்சியால் அபரிமிதமான பலன்களை பெற போகும் ராசிகள்:

தனுசு ராசி:

சனி வக்ர பெயர்ச்சி 2023

சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுக்கும். தொப்புள் கொடி உறவுகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் ஆன்மிகத்தில் ஆதிக்க நாட்டம் கொள்வீர்கள்.

கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்

கன்னி ராசி:

சனி வக்ர பெயர்ச்சி 2023

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். படிக்கும் மாணவர்களுக்கு இந்த கால கட்டம் ரொம்ப உதவியாக இருக்கும். கல்வியில் நல்ல செய்திகள் வரும். மேல் படிப்பிற்கு வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தால் இந்த நேரத்தில் நீங்கள் அதனை தீர்த்து கொள்வீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நல்ல பலனை அடைவீர்கள்.

மேஷ ராசி: 

சனி வக்ர பெயர்ச்சி 2023

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11-வது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். அதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டமானது லாபத்தை கொடுக்கும். உங்களின் எல்லா செயல்களுக்கு நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணியிடத்தில் உங்களின் வேலைகளில் வெற்றியை அடைவீர்கள். புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். ரொம்ப நாட்களாக தடைபட்டு இருந்த காரியம் கூட  இந்த நேரத்தில் அவற்றை முடித்து காட்டுவீர்கள்.

புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி தர போகிறது..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement