சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022

simma rasi guru peyarchi

சிம்மம் – குரு பெயர்ச்சிப் பலன்கள் 2021 – 2022

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள். இந்த குரு பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் எழுந்து கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பொன்னான பார்வை கிடைக்கப் போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு கவலை என்ற சொல் வாழ்வில் ஒரு பொழுதும் வரப்போவதில்லை, குருவின் பார்வை சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அள்ளி தரப்போகிறது. அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் சிம்ம ராசிக்காரர்களின் குரு பெயர்ச்சி பலன்களை படித்தறியலாம் வாங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 Simmam | Simmam Guru Peyarchi 2021 to 2022 in Tamil

குரு பெயர்ச்சி சிம்ம ராசி பலன்

கடந்த காலத்தில் ஆறாம் வீடான மகரத்தில் இருந்த குரு பகவான் இப்போது 13.11.2021 அன்று களத்திரஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவானின் நேர்பார்வையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும் வருடமாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். நீங்கள் நினைக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களது ஆசை அனைத்தும் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். புகழ், கவுரவம் உயரும்.

ஆரோக்கியம் – குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 Simmam:

  • இதுவரை மந்தமான நிலையில் இருந்தவர்கள் உற்சாகம் நிறைந்தும், ஆற்றல் அதிகரித்தும் காணப்படுவீர்கள். உடல் நலம் மற்றும் மன நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

தொழில் – Simma Rasi Guru Peyarchi:

  • தொழில் உத்தியோகம் பொறுத்தவரை லாபம் அதிகரிக்கும். வியாபாரிகள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். புதிதாக தொழில் தொடங்க முயற்சிப்பவர்கள் இப்பொழுது தொழில் தொடங்கினால் சாதகமாக முடியும். தொழில் தொடங்குவதற்கு தேவையான பணம் உங்கள் கைக்கு வரும். சிலருக்கு கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

வேலை – Guru Peyarchi 2021 to 2022 Simmam

  • வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையில் தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு இப்பொழுது வேலை நிரந்தரமாகும்.

குடும்ப உறவு – Guru Peyarchi 2021 Simmam

  • குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை உங்களை புரிந்துகொள்ளாதவர்கள் உங்களை புரிந்து நடப்பார்கள். வீட்டில் உங்களது மதிப்பு உயரும். நண்பர்களின் ஆதரவு பெருகும்.

வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் – Guru Peyarchi 2021 to 2022

  • வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது உங்களது ஆசைகள் நிறைவேறும் குரு பெயர்ச்சியாக இருக்கும். குழந்தைகள், கணவன் மற்றும் குடும்ப உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்த படி நடந்துகொள்வார்கள்.

திருமணம் – Simma Rasi Guru Peyarchi:

  • திருமண வயதில் உள்ள ஆண்/ பெண் இருவருக்கும் திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். மறுமணம், காதல் திருமணம் கைக்கூடும்.

கல்வி:

  • மாணவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. எழுதப்போகும் அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று உங்களுக்கு பிடித்த Course-ல் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. UPSC, TNPSC போன்ற தேர்வுகள் எழுதினால் அதில் வெற்றிகள் கிடைக்கும்.

பரிகாரம்:

  • சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ குருபகவானை தரிசிக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் நல்லது நடக்கும்.
மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021- 2022
மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்