Sontha Veedu Amaiya Pariharam in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். அப்படி உங்களுக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்காக நீங்கள் முயற்சிக்கும் பொழுது பல தடைகள் ஏற்படுகிறது என்று கவலையாக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய ஆன்மிக பதிவில் சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக முயற்சிக்கும் முன் செய்யவேண்டிய சில பரிகாரங்களை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சொந்த வீடு வாங்க வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்
Own House Pariharam in Tamil:
சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக முயற்சிக்கும் முன் செய்ய வேண்டிய சில பரிகாரங்களை பற்றி விரிவாக காணலாம். முதலில் ஒரு பச்சை நிற துணியை எடுத்து கொள்ளுங்கள்.
அதில் 1 கைப்பிடி அளவு துவரம் பருப்பினை வைத்து கொள்ளுங்கள். அதன் மீது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு மற்றும் 1 ரூபாய் நாணயத்தை வைத்து அதனை நன்கு முடிந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து அதற்கு மலர்களால் அர்ச்சனை செய்து மற்றும் தீபம் எல்லாம் காட்டி மஹாலக்ஷ்மியை நினைத்து பிராத்தனை செய்யுங்கள்.
இந்த பிர்த்தனையை தினமும் செய்து வாருங்கள் நீங்கள் விரைவில் வீடு கட்டி விடுவீர்கள் அல்லது வாங்கி விடுவீர்கள்.
சொந்த வீடு அமைய பரிகாரம்:
முதலில் உங்களின் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து விட்டு அதில் ஒரு சிறிய கோலம் போட்டு கொள்ளுங்கள். அதன் மீது ஒரு தட்டினை வைத்து அதில் ஆறு அகல் விளக்குகளை வைத்து அவை அனைத்திற்கும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அவற்றில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு விளக்கை ஏற்றி கொள்ளுங்கள். இப்பொழுது முருகனை நினைத்து கொண்டு மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் காட்டி பிராத்தனை செய்யுங்கள்.
இந்த பிரார்த்தனையை நீங்கள் வாரம் வாரம் செவ்வாய் கிழமை அன்று தொடர்ந்து செய்து வாருங்கள் நீங்கள் விரைவில் வீடு கட்டி விடுவீர்கள் அல்லது வாங்கி விடுவீர்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சொந்த வீடு அமைய கார்த்திகை அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |