Srirangam Temple..! ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..! Sri Ranganathaswamy Temple..!

Advertisement

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..! Sri Ranganathaswamy Temple..! 

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் தாங்களுக்கு பயனுள்ள வகையில் ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுவோம்..!

Srirangam Temple Images

Srirangam Temple: ஸ்ரீரங்கத்தில் முக்கியமான கோவிலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவிலை சொல்லலாம். ஏனென்றால் இந்துக்களின் முக்கியமான இடமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்கு சிறப்பு பெற்றது இந்த ஸ்ரீரங்கம் திருக்கோவில். ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் 7 திருச்சுற்று மற்றும் 21 கோபுரமும் கொண்டுள்ள சிறப்புமிக்க திருத்தலம் ஆகும்.

ராஜகோபுரம் என்றழைக்கப்படும் கோபுரத்தின் தெற்கு கோபுரம் 236 அடி (73 மீட்டர்) உயரத்தை கொண்டவை ஆகும்.  ராஜகோபுரத்தின் கட்டமைப்பு 400 ஆண்டுகளுக்கு முழுமையடையாததாக இருந்தது. இராஜகோபுரத்தை முடித்து வைக்கும் பணி ஸ்ரீஅஹோபில மடத்தின் 44 வது ஜீயரான ஸ்ரீ வேதாந்த தேசிகா யாதேந்திர மஹதீஸ்சனரால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இறுதியாக 8 வருட காலப்பகுதியில் முழுமையாக கோபுரம் நிறைவடைந்தது.

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதலில் விளங்குகிறது ஸ்ரீரங்கம். கி.மு 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆழ்வாரால் எழுதப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீரங்கம் கோவிலானது மிகவும் புகழ்பெற்றது.  ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் 156 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் 4116 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் மட்டுமே 10 லட்சம் பக்தர்கள் விஷ்ணுவை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவில் பக்தர்களால் திருவரங்க திருப்பதி, பெரிய கோவில், போக மண்டபம், பூலோக வைகுண்டம் இது போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் சுற்றுலா தளங்களில் புகழ்ப்பெற்று விளங்குவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவில் 7 பிரகாரங்களை கொண்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் 50 துணை கோவில்கள், 9 புனித குளங்கள், விமானம் மற்றும் நுணுக்கமாக செதுக்கிய நிறைய தூண்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் விஷ்ணுவை வழங்குவதற்காக வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ஸ்ரீரங்கம் கோவில் சிறப்புகள்:

மூலவர்  ரங்கநாதர் 
உற்சவர்  நம்பெருமாள் 
அம்மன் / தாயார்  ரங்கநாயகி 
தல விருட்சம்  புன்னை 
தீர்த்தம்  சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் 
ஆகமம் / பூஜை  பாஞ்சராத்திரம் 
புராண பெயர்  திருவரங்கம் 
ஊர்  ஸ்ரீரங்கம் 
மாவட்டம்  திருச்சி 
மாநிலம்  தமிழ்நாடு 

Sri Ranganathaswamy Temple –  7 பிரகாரங்கள்:

  • முதல் பிரகாரம் / திருவீதி – தர்மவர்மன் திருச்சுற்று
  • இரண்டாம் பிரகாரம் / திருவீதி – ராஜ மகேந்திரன் திருவீதி
  • மூன்றாம் பிரகாரம் / திருவீதி – குலசேகரன் திருவீதி
  • நான்காம் பிரகாரம் / திருவீதி – ஆலிநாடன் திருவீதி
  • ஐந்தாம் பிரகாரம் / திருவீதி – அகளங்கன் திருவீதி
  • ஆறாம் பிரகாரம் / திருவீதி – திருவிக்ரமன் திருவீதி
  • ஏழாம் பிரகாரம் / திருவீதி – சித்திரை திருவீதி

Sri Ranganathaswamy Temple – திருவிழாக்கள்:

ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று கூறப்படுகிறது. திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்கின்றனர். தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோவிலில் பகதர்கள் கூட்டம் அதிகமாவே இருக்கும்.

Srirangam Temple Images

ஸ்ரீரங்கம் கோவில் முக்கிய திருவிழாக்கள்:

  • வைகுண்ட ஏகாதேசி
  • பிரம்மோற்சவம்
  • ஜேஷ்டாபிஷேகம்
  • பவித்ரோத்சவம்
  • ஸ்ரீ ஜெயந்தி
  • ஊஞ்சல்
  • சித்திரைத் தேர்

ஸ்ரீரங்கம் கோவில் தரிசன நேரம் / Srirangam Temple Timings:

Srirangam Temple Dharshan Timings  ஸ்ரீரங்கம் கோவில் நடை திறப்பு நேரம் 
Viswaroopa seva / விஸ்வரூப சேவா 06:00 am to 07:15 am
Pooja time ( No Darshan) / பூஜை 07:15 am to 09:00 am
General Darshan Timings / பொது தரிசனம் 09:00 am to 12:00 am
Pooja time ( No Darshan) / பூஜை 12:00 am to 01.15 pm
Darshan Timings / பொது தரிசனம் 01:15 pm to 06:00 pm
Pooja time ( No Darshan) / பூஜை 06:00 pm to 06:45 pm
Darshan Timings / பொது தரிசனம் 06:45 pm to 09:00 pm

Srirangam Temple – நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வெண்ணை பூசுதல், குங்குமப்பொடி சாற்றுதல், பூ மாலைகள், சுவாமிக்கு ஆடை சாற்றலாம், இதை தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வழங்கலாம்.

Srirangam Temple – போக்குவரத்து வழி:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஏராளமான பேருந்துகள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல இயக்கப்படுகிறது.

Sri Ranganathaswamy Temple – கோவில் அஞ்சல் முகவரி:

அருள்மிகு ரங்கநாதர் கோவில், 

ஸ்ரீரங்கம் – 620006,

திருச்சி மாவட்டம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   

 

Advertisement