
சுப யோகங்கள் | Suba Yogangal in Tamil
ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையை பொறுத்து ஒவ்வொருவருக்கும் பல்வேறு யோகங்கள் கிடைக்கும். யோகங்கள் என்பது ஜாதக கட்டத்தில் குறிப்பிட்ட ஸ்தானத்தில் அமைந்திருக்கும். யோகங்களில் சுப யோகங்கள் மற்றும் அசுப யோகங்கள் உள்ளன. சுப யோகங்கள் நல்ல பலன்களை தரக்கூடியவை, அசுப யோகங்கள் தீய பலன்களை தரக்கூடியவை. நாம் இந்த தொகுப்பில் நல்ல பலன்களை தரக்கூடிய சுப யோகங்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
கத யோகம்:
- Suba Yogangal: இரண்டு கேந்திர வீடுகளில் லக்னம் நான்கு என்ற இடத்திலோ அல்லது நான்கு, ஏழு என்ற என்ற இடத்திலோ அல்லது ஏழு, பத்து என்ற இரு கேந்திர வீடுகளிலோ அல்லது பத்தாவது இடத்தில் இருந்தால் அது கத யோகம் எனப்படும்.
- இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணமும், கடின உழைப்பாளியாகவும், செல்வம் அதிகம் உடையவராகவும், இறைவழிபாட்டில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்கள்.
சகடம் யோகம்:
- சுப யோகங்கள்: இரண்டு கேந்திரங்களில் மட்டும் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் அது சகட யோகம் எனப்படும்.
- இந்த யோகத்தில் இருப்பவர்கள் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர்களாகவும், அவர்களின் ஆசை படி வாழ்பவர்களாகவும், வாழ்க்கை துணையை அனுசரித்து செல்பவர்களாகவும் இருப்பார்கள்.
விஹக யோகம்:
- Suba Yogangal: லக்னம் 4, 10 ஆகிய இரண்டு கேந்திரங்களில் இருந்தால் அது விஹக யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் யாரையும் சார்ந்து வாழாமல் இருப்பார்கள். மேலும் இவர்கள் வெளிப்பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
சிருங்காடக யோகம்:
- யோகம் பலன்கள்: சூரியன் முதல் சனி வரை உள்ள அனைத்து கிரகங்களிலும் லக்னம் 5-ம் மற்றும் 9-ம் இடம் ஆகிய இடத்தில் இருந்தால் அது சிருங்காடக யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் ஆரம்ப வாழ்க்கையில் துன்பமும், இறுதி வாழ்க்கையில் இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள்.
ஹல யோகம்:
- Suba Yogangal: ஜாதகத்தில் லக்னத்தில் திரிகோணம் அமையாமல், வீடுகளில் திரிகோணங்கள் அமைந்தால் அது ஹல யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் பெற்று செல்வந்தர்களாக வாழ்வார்கள்.
கஜகேசரி யோகம்:
- சுப யோகங்கள்: இந்த யோகம் சந்திரனில் இருந்து கேந்திரத்தில் இருந்தால் ஏற்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் புகழ், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உடையவராக இருப்பார்கள்.
புதாத்திய யோகம்:
- புதனும், சூரியனும் ஜாதகத்தில் ஒன்றாக இருந்தால் அது புதாத்திய யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அஷ்டலக்ஷ்மி யோகம்:
- யோகம் பலன்கள்: ஜாதகத்தில் ஆறாமிடத்தில் ராகு நின்று லக்ன கேந்திரம் செயல்படாமல் இருந்தால் அது அஷ்டலக்ஷ்மி யோகம் ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சகல சௌபாக்கியம் பெற்று அரசர் போல வாழ்வார்கள்.
சுப கத்திரி யோகம்:
- சுப யோகங்கள்: லக்னத்தில் 12-ம் அல்லது 2-ம் வீட்டில் குரு, புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் இருப்பதால் சுப கத்திரி யோகம் ஏற்படும். வாழ்க்கையில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த யோகம் உதவியாக இருக்கும்.
தர்மகர்மாதிபதி யோகம்:
- சுப யோகங்கள்: 9-ம் வீட்டில் தர்ம ஸ்தாணமும், 10-ம் வீட்டில் கர்ம ஸ்தானத்தில் அமைந்தால் அது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த இடத்தில் வேலை செய்பவராகவும் அல்லது தொழிலில் சிறந்து விளங்குபவராகவும் இருப்பார்கள்.
லட்மியோகம்:
- யோகம் பலன்கள்: 9-ம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் கேந்திர வீடாகவும் அல்லது திரிகோண வீடாகவும் இருந்தால் லட்சுமி யோகத்தை பெற முடியும். இந்த யோகம் உள்ள ஜாதகத்தில் சகல செல்வம் கிடைத்து, எல்லா வசதிகளையும் பெற்று வாழ்வான்.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்:
- குரு 5 அல்லது 10-க்கு அதிபதியாக இருந்தால் அது அகண்ட சாம்ராஜ்ய யோகம் எனப்படும். இந்த யோகத்தின் மூலம் நீண்ட ஆயுள், செல்வம், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.
கால சர்ப்ப யோகம்:
- ராகு, கேது இவர்களின் நடுவில் இருந்து விட்டால் அது கால சர்ப்ப யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்து தங்களின் முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற வேண்டி வரும்.
புத்தி மாதுர்ய யோகம்:
- புத்தி மாதுர்ய யோகம் ஐந்தாம் வீட்டில் சுபனால் பார்க்கப்பட்டால் அல்லது சுப வீட்டில் இருந்தால் ஏற்படுகிறது. இந்த யோகம் இருப்பவர்கள் குணத்திலும், அறிவிலும் உயர்ந்த குணம் கொணடவர்களாக இருப்பார்கள்.
கேமத்ரூம யோகம்:
- சந்திரனுக்கு அருகில் இருக்கும் இரு புற வீடுகளும் காலியாக இருந்தால் கேமத்ரூம யோகம் ஏற்படும். இந்த யோகம் உள்ளவர்கள் ஏழைகளாகவும், வாழ்வில் மகிழ்ச்சி இல்லாதவராகவும் இருப்பார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |