டீ, காபி, பால் குடிக்கும் பழக்கத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்று தெரிந்து கொள்ளலாம்..

Tea Coffee Milk Drinking Personality in Tamil

Tea Coffee Milk Drinking Personality in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. கண்டிப்பாக உங்களுக்கு டீ, காபி, பால் இவற்றில் ஏதேனும் ஒன்று தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு வேளையும் அருந்தும் நபராக தான் இருப்பீர்கள். இந்த டீ, காபி, பால் குடிக்கும் பழக்கத்தை வைத்தே ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று அறியலாம். இந்த மூன்று பானங்களில் எதனு ஒன்று விரும்பி குடிக்கும் நபர் நீங்கள் என்றால், உங்கள் குணம் இப்படி தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனை ரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

டீ (Tea):

உங்களுக்கு டீ மிகவும் பிடித்த பானம் என்றால் உங்களுக்கு இயற்கையாகவே ரசனை திறன் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் ரசனையுடன் செய்யக்கூடிய நபர் நீங்கள்.

இனிமை, மகிழ்ச்சி இவை அனைத்தையும் அதிகளவு அனுபவிக்க வேண்டும் என்று நினைக்க கூடிய நபர் நீங்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் நிதானமாக செய்யக்கூடிய நபர் நீங்கள்.

உங்களிடம் சமயோகித புத்தி அதிகளவு நிறைந்து இருக்கும். கடினமான பணிகளை கூட மிக எளிதாக செய்துவிடுவீர்கள். உங்களது புத்தி கூர்மையாகவே இருக்கும்.

கோபம் என்பது உங்களுக்கு அதிகமாக வராது, அப்படி கோபம் வந்துவிட்டது என்றால் உங்களை கையில் பிடிக்க முடியாது.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில்கூட நல்ல முடிவு எடுக்கும் திறன் உங்களிடம் அதிகம் இருக்கும்.

கஷ்டம் என்பது தன வாழ்க்கையில் அணுகக்கூடாது என்று நன்கு திட்டமிட்டு வாழக்கூடிய நபர் நீங்கள்.

பொதுவாக நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய நபர் நீங்கள்.

காபி (coffee):

காபியை அதிகம் விரும்பி அருந்தும் நபர் நீங்கள் என்றால் நீங்கள் மிகவும் தனித்துவமான நபராக இருப்பீர்கள். அனைத்து விஷன்களிலும் டெடிகேட்டிவாக செயல்படுவீர்கள்.

உங்களிடம் கற்பனை திறன் அதிகமாக இருக்கும். உங்களுக்கு லீடர்ஷிப் குணமும் இருக்கும் மற்றவர்களை நல்ல வழியில் வழிநடத்தி செல்வது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி நீங்கள் அதனை மிகவும் ஸ்மார்டாக செய்து முடித்துவிடுவீர்கள்.

இருந்தாலும் உங்களுக்கு கோபம் அதிகமாகவே வரும், சாதாரண விஷயத்திற்கு கூட நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்வீர்கள். அதிலும் தன் சுயமரியாதை மற்றும் தன்மானத்தையும் யாராவது சீண்டிவிட்டார்கள் என்றால் கோபம் அதிகமாகவே வந்துவிடும்.

உங்களுக்கு கோபம் என்பது அதிகமாக வருமென்றாலும், நீங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் என்று சொல்லலாம். உங்களிடம் யாராவது ரசியம் சொன்னார்கள் என்றால் அதனை யாரிடமும் சொல்லாமல் ரகசியத்தை பாதுகாப்பீர்கள்.

என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு, சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.

மேலும் சுதந்திரமாக அணைத்து விஷயத்தையும் யோசிக்கக்கூடிய நபர் நீங்கள்.

காபி என்பது கசப்பு சுவை கொண்ட ஒரு பானம், அந்த கசப்பு சுவை கொண்ட பானத்தை கூட விரும்பி அருந்தும் நபர் நீங்கள் என்பதால், உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் கூட அதனை எளிதாக சமாளித்து வாழ்வீர்கள்.

பால் (Milk):

ஒருசிலருக்கு டீ, காபி இரண்டுமே பிடிக்காது பாலைத்தான் விரும்பி அருந்துவார்கள். அந்த நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்கள் குணம் எப்படி இருக்கும் என்றால்,

உங்களுடைய வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே சமநிலையில் இருக்கும். நீங்கள் ஏய்ந்த ஒரு விஷயத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள், இருப்பினும் உங்களுக்கு பிடித்த விஷயத்திற்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.

இவர்கள் பெரும்பாலும் கூல் டைப்பாக தான் இருப்பீர்கள், அதிலும் மற்றவர்களுக்கு எந்த ஒரு கெடுதலும் கொடுத்துவிட கூடாது என்று வாழக்கூடியவர்.

உங்கள் மனம் மிகவும் மென்மையாக இருக்கும், அனைத்து விஷயத்திற்கும் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். நீங்களுமே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று வாழ கூடியவர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்