தஞ்சை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சிறப்பு மிகுந்த இடங்கள் (Thanjavur Tourist Place)..!
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் – சோழர்களின் தலைநகரம் தஞ்சை. தஞ்சை மாவட்டம் வரலாற்று சுற்றுலாவிலும், ஆன்மீக சுற்றுலாவிலும் தமிழ்நாட்டிலேயே மிக சிறந்து விளங்கும் முதன்மை மாவட்டமாக திகழ்கின்றது. ராமேஸ்வரம், கன்னியாகுமாரி போன்ற சுற்றுலா தளங்களை போலவே, தஞ்சாவூருக்கும் வெளிநாட்டு பயணிகள் அதிகமாக வருகின்றனர்.
சரி வாங்க தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் (Thanjavur Tourist Place) சிலவற்றை இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்..!
கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா |
தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் (Thanjavur Tourist Place)..!
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், ராஜ ராஜ சோழன் மணி மண்டபம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், அரண்மனை, கலைக்கூடம், தஞ்சை பெரிய கோவில், ஸ்வார்ட்ஸ் தேவாலயம், மனோரா கோபுரம், தராசுரம், சிவகங்கை பூங்கா, மகாமக குளம், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் நினைவு மண்டபம், சரபேஸ்வர் ஆலயம், பூண்டி மாதா கோவில், வியாகரபூரீஸ்வரர் கோவில், தமிழ் பல்கலைக் கழகம், சுவாமிமலை, திருவையாறு, திருபுவனம் கோவில், கும்பகோணம் கோவில்கள், சூரியனார் கோவில், சாரங்கபாணி கோவில், உப்பிலியப்பன் கோவில், சோமேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், ராமசாமி கோவில் என இன்னும் பல ஆன்மீக மற்றும் வரலாற்று சுற்றுலாத் தளங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அவற்றில் சிலவற்றை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் (Thanjavur Tourist Place) – தஞ்சை பெரிய கோவில்:-
ராஜராஜபுரம் என்ற பெயரில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், தற்போது தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சைப் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தஞ்சை பெரிய கோவில் போன்று வேறு எந்த தென்னிந்திய கோவில்களும் கட்டப்படவில்லை. இந்த தஞ்சை பெரிய கோவிலில் ராஜ கோபுரத்தை விட விமான கோபுரம் உயர்ந்தது. அதிலும் இந்தியாவிலேயே பழமை வாய்ந்த உயரமான கட்டிடங்களுக்கு நிகரானது.
தஞ்சை பெரிய கோவில் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..! |
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் (Thanjavur Tourist Place) – விஜயநகர கோட்டை:
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் – இந்த விஜயநகர கோட்டை தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த விஜயநகர கோட்டை 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.
ஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள்..! |
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் (Thanjavur Tourist Place) – சரஸ்வதி மஹால் நூலகம்:-
தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள் – ஆசியா கண்டத்திலேயே மிக பழமையான நூலகம் என்ற புகழை பெற்ற சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இந்த சரஸ்வதி மஹால் நூலகத்தில் மிக பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நூலகத்தில் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலகம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |