தேங்காய் இப்படியெல்லாம் உடைந்தால் கெட்ட சகுனமா..! தப்பி தவறி கூட யாரும் இப்படி உடைக்காதீங்க

thengai udaiyum palangal in tamil

தேங்காய் உடையும் பலன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தேங்காய் உடையும் பலம் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக வீட்டிலோ அல்லது கோவிலுக்கு தேங்காயை பூஜைக்கு எடுத்து செல்வது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் எடுத்து செல்வதை விட அதனை உடைக்கும் போது இருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். காரணம் தேங்காய் என்பது ஆன்மீகத்தில் தொடர்புடையது அதனால் அதனை உடைக்கும் போது மிகவும் புனிதமாக பார்க்கிறார்கள். வாங்க இப்போது தேங்காய் எப்படி உடைந்தால் நல்லது. எப்படி உடைத்தால் கெட்டது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

தேங்காய் உடையும் பலன்:

தேங்காய் என்பது கோவில்லு மட்டுமில்லாமல் வீடு கட்டும் போது, பிறந்த நாட்கள், திருமண நாட்கள் போன்ற நாட்களிலும் கோவிலுக்கு எடுத்து சென்று அப்போது மனதில் ஒன்று நினைத்தது தேங்காய் உடைத்தால் நல்லது என்று இந்த காலக்கட்டம் வரை பூஜை செய்து வருகிறார்கள். அதேபோல் தீபாவளி, பொங்கல், அமாவாசை, போன்ற விரத நாட்களிலும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அப்படி தேங்காய் உடைக்கும் போதே தெரிந்துவிடும் நாம் நினைக்கும் காரியம் நன்றாக இருக்கும் என்று. வாங்க எப்படி உடைய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்..!

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்

  • தேங்காய் உடைக்கும் போது தேங்காய் அழுகி இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவும் என்று அறிவுறுத்துகிறது என்று அர்த்தமாம்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்

  • பூஜைக்கு உடைக்கும் தேங்காய் உடைந்து சிதறி தூள் தூளாக விழுந்தால் உங்களுக்கு தொழில் ஏதேனும் பிரச்சனை வரும் அல்லது பணவிரயம் ஏற்படும் என்கிறார்கள்.

 தேங்காய் உடையும் பலன்கள்

  • தேங்காய் உடைக்கும் போது அது சரியான வடிவில் உடையாமல் கோணலாக உடைந்தால், உங்களுக்கு ஏதேனும் மனக்கஷ்டம் ஏற்பட போது என்று அர்த்தமாம். இவற்றை தவறாக புரிந்துகொண்ட கெட்ட சகுனம் என்று நினைத்து மனதில் கஷ்டம் கொள்ள வேண்டாம்.
  • இவை அனைத்தும் நடக்க போகிறது என்று கடவுள் முன்கூட்டிய நமக்கு மறைமுகமாக சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதற்கு ஏற்றது போல் நடந்துகொள்ளவும்.
  • கோவிலுக்கு சென்று அங்கு தேங்காய் இரண்டாக வட்ட வடிவில் உடைந்தால் அது நல்ல சகுனம் அதுமட்டுமில்லால் நினைத்த காரியங்கள் நடக்குமாம். எந்த பிரச்சனையும் ஏற்படதாம்.

 thengai udaiyum palangal in tamil

  • அதே தேங்காயை உடைக்கும் போது அதில் பூ இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்று அர்த்தம் அல்லது திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்குமாம்.
  • காலை வேளையில் தேங்காய் உடைத்தால் நினைத்த காரியம் 10 நாட்களில் நடக்கும் என்றும், மதிய வேளையில் உடைக்கப்பட்டிருந்தால் உங்களுக்கான பலன்கள் ஒரு மாதத்திற்குள் நடக்கும் என்றும், இரவு நேரங்களில் தேங்காய் உடைத்தால் 6 மாதத்திற்குள் அந்த பலன்கள் உங்களை வந்தடையும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்