மறந்தும் சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்காதீர்கள்..! பணக்கஷ்டம் உண்டாகும்..!

Things Not To Buy On Saturday in Tamil

Things Not To Buy On Saturday in Tamil

இன்றைய ஆன்மிகம் பதிவில் கடன் பிரச்சனையில் இருந்து நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்குமே கடன் பிரச்சனை இருக்கும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கடன் கொடுக்கவே சரியாக இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். அதுபோல கடன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக பலரும் பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பரிகாரங்கள் செய்தும் பலனில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

9 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்..!

சனிக்கிழமையில் வாங்க கூடாத பொருட்கள்:  

நீதிகாரகனான சனிபகவானுக்கு உகந்த நாள் தான் சனிக்கிழமை. இந்த நாளில் நாம் சில பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் வீட்டில் பணக்கஷ்டம், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் சனிக்கிழமைகளில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்.

இரும்பு பொருட்கள்: 

இரும்பு பொருட்கள்

இரும்பு அல்லது இரும்பால் செய்யப்பட்ட கத்தரிக்கோல், கத்தி போன்ற பொருட்களை சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. இது கெட்ட செயலாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. சனிபகவானுக்கு உகந்த நாளில் இரும்பு பொருட்கள் வாங்கினால் பணக்கஷ்டம் உண்டாகும். மேலும் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

உப்பு:

உப்பு

சனிக்கிழமையில் உப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை அன்று உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் உண்டாகும். பணவரவு நீங்கி கடன் தொல்லை அதிகரிக்கும். அதனால் சனிக்கிழமை உப்பு வாங்க கூடாது. அதுபோல வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்குவது நல்லது.

இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..!

எண்ணெய்:

எண்ணெய்

கருப்பு எள், கருப்பு உளுந்து மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை சனிக்கிழமையில் வாங்க கூடாது. இந்த பொருட்களை எல்லாம் சனிக்கிழமை அன்று வாங்கினால் உங்கள் வாழ்வில் பல தடைகள் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இந்த பொருட்களை சனிக்கிழமையில் தானமாக கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல், எள்ளு விளக்கேற்றி சனிபகவானை வழிபடுவது மிகவும் நல்லது.

செருப்பு: 

செருப்பு

சனிக்கிழமையில் செருப்பு, பர்ஸ், துடப்பம் போன்ற பொருட்களை வாங்க கூடாது. இதனால் வீட்டில் சிக்கல்கள் ஏற்படும். துடப்பம் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருள் என்பதால் இதை சனிக்கிழமையில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்