பெண்கள் தூங்கி எழுந்ததும் இதுபோன்ற செயல்களை மறந்தும் செய்து விடாதீர்கள்..!

Advertisement

Things Not To Do When You Wake Up In The Morning in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் தூங்கி எழும் போது எந்தெந்த செயல்களை செய்கின்றோமோ அதை வைத்து அந்த நாளின் நடக்கும் நன்மை மற்றும் தீமையை தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழும் போது சில செயல்களை செய்ய கூடாது. அதனால் வீட்டில் பணக் கஷ்டம் உண்டாகும். அந்த வகையில் காலையில் பெண்கள் செய்யக்கூடாத செயல்கள் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

காலையில் எழுந்ததும் செய்ய கூடாதவை:

காலையில் எழுந்ததும் செய்ய கூடாதவை

காலையில் எழுந்ததும் பெண்கள் சில செயல்களை செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பெண்கள் அனைவருமே இதுபோன்ற செயல்களை தெரியாமல் செய்து விடுகிறார்கள். அப்படி செய்வதால் வீட்டில் பணக்கஷ்டம், கடன் பிரச்சனை போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பெண்கள் இதுபோன்ற செயல்களை காலையில் செய்யாதீர்கள்.

காலையில் பெண்கள் படுக்கை அறையை விட்டு எழும் போது தலை முடியை விரித்து போட்டு கொண்டு முன் வாசல் கதவை ஒருபோதும் திறக்க கூடாது. இதனால் வீட்டிற்கு வரும் லட்சுமி திரும்பி போய் விடுவார் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

சில பெண்கள் தூங்கி எழுந்து வாசல் கதவை திறக்கும் போது, கையில் குப்பைகள், துடைப்பம் போன்றவற்றை எடுத்து செல்வார்கள். இதுபோல செய்து வருவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது.

அதுபோல பெண்கள் காலையில் வாசலை கூட்டி சுத்தம் செய்யாமல் இருக்க கூடாது. அதேபோல சுத்தம் செய்தாலும் அதில் கோலம் போடாமல் இருக்க கூடாது. இப்படி செய்து வருவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நீங்கி பணக்கஷ்டம் உண்டாகும்.

காலையில் பெண்கள் அடுப்பறைக்கு சென்று சமைக்கும் போது அடுப்பை துடைக்காமல் சமைக்க கூடாது. அடுப்பை சுத்தமாக துடைத்து விட்டு பிறகு தான் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.

அதுபோல காலையில் எழும்போது தீய எண்ணங்களை மனதில் வைத்து கொண்டு எழ கூடாது. தொடங்கும் அந்த நாளை சண்டையுடன் தொடங்க கூடாது. அதனால் தொடங்கும் அந்த நாளை புன்னகையுடன் தொடங்க வேண்டும்.

அதனால் தூங்கி எழுந்ததும் பெண்கள் தங்கள் உள்ளங்கையை பார்க்க வேண்டும். இதனால் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும். அதுபோல மேல் கூறிய செயல்கள் செய்வதை பெண்கள் தவிர்த்து வந்தால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் இதை பாருங்கள் அதிர்ஷ்டம் வரும்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement