மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!

poojai araiyil vaika vendiya porutkal in tamil

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது பூஜை அறையில் வைக்ககூடாத பொருட்களை பற்றித்தான். பூஜை அறை என்பது நாம் அனைவரின் வீட்டிலும் ஒரு சிறிய கோவில் போன்று தான் பார்த்துக்கொள்ளுவோம். அப்படிப்பட்ட பூஜை அறையில் என்னனென்ன பொருட்களையெல்லாம் வைக்கலாம் அவற்றை எவ்வாறு வைக்கவேண்டும். மேலும் எந்ததெந்த பொருட்களை வைக்கக்கூடாது ஏன் வைக்கக்கூடாது என்றெல்லாம் ஒரு வரையறையை நமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

அதிலிருந்து நாம் சிலவற்றை பார்க்கலாம் அதிலும் முக்கியமாக பூஜை அறையில் வைக்ககூடாத பொருட்களை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

இதையும் பாருங்கள் => பூஜையில் வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கினால் வீட்டில் வறுமை வந்துகொண்டே இருக்கும்

பூஜையில் தெய்வத்திற்கு படைக்கவேண்டிய பொருட்கள்:

 poojai araiyil vaika vendiya porutkal in tamil

நம்மில் பலருக்கும் வீட்டில் பூஜை செய்யும்போது எந்த பொருளை எப்படி வைக்கவேண்டும் என்று நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அதில் சிலவற்றை பார்க்கலாம் வெற்றிலையை இப்படி வைக்கலாமா, சுவாமிக்கு எந்த பழம் வைத்து படைக்கலாம், பூஜையை எப்படி ஆரம்பிக்கலாம், எந்த பூக்களைக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று பல சந்தேகங்கள் வருவது உண்டு.

அதே போல வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியமாக இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.குறிப்பாக வாழைபழத்தில் நாட்டுப்பழம் நல்லது.

பூஜையில் எந்த பொருட்களை எப்படி பயன்படுத்தவேண்டும்:

 poojai araiyil vaika kudatha porutkal in tamil

குடுமி தேங்காயை சீராக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.

தேவையில்லாத பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக அப்படி என்னென்ன பொருள்களையெல்லாம் பூஜை அறையில் வைக்கக்கூடாது என்றால் ஆயுதங்களை வைக்கக்கூடாது.

பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி அந்த பூஜை அறையில் குவித்து வைக்கக் கூடாது. நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பொருட்களை மட்டும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உடைந்த பொருட்கள் பூஜை அறையில் இடம் பெற்றிருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக உடைந்த கண்ணாடி பூஜை அறையில் இருக்கவே கூடாதாம்.கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

பூஜைக்கு எந்த மலர்களை பயன்படுத்தலாம் அவற்றை  எப்படி பயன்படுத்தவேண்டும்:

 poojai araiyil kannadi vaikalama in tamil

நமது பூஜை அறையில் உள்ள சுவாமி படத்திற்கு மலர்களையும், மாலைகளையும் சூட்டும்போது சுவாமியின் முகமும், பாதமும் மறைவதுபோல் சூட்டக் கூடாது என்று கூறப்படுகின்றது.

விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு, பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு, சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது.

திருமகளுக்கு தும்பை பூ ஆகாது, பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல.

வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளெருக்கு, ஊமத்தை போன்றவை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகன் போன்ற கடவுளுக்கு அரளி பூக்கள் உகந்தவை.

அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சனை செய்யும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதை தவிர்க்க வேண்டும் . காய்ந்து போன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்தகூடாது. இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்