சனிக்கிழமை இந்த பொருட்களை மறந்தும் வாங்கி விடாதீர்கள் தீராத கஷ்டம் ஏற்படும்

Advertisement

சனிக்கிழமை செய்யக் கூடாதவை

ஒவ்வொரு நாளும் சிறப்பு மிக்க நாள் தான் .அதிலும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாக இருக்கும். அப்படி இருக்கும் நாட்களில் சனிக்கிழமையும் இன்று. சனிக்கிழமை சனி பகவானுக்கு உங்கள் நாள். அந்த நாட்களில் சில பொருட்களை வாங்கினால் நன்மை நடக்கும்,அதே போல் சில பொருட்களை வாங்கினால் வீட்டில் கஷ்டமும் ஏற்படும். என்னென்ன பொருட்கள் சனிக்கிழமை அன்று வாங்க கூடாது இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம்.

சனிக்கிழமை அன்று வாங்க கூடாத பொருட்கள்:

இரும்பு பொருட்கள்:

சனிக்கிழமை செய்யக்கூடாதவை

சனிக்கிழமையில் இரும்பு சம்மந்தப்பட்ட பொருளை வாங்க கூடாது. ஏனென்றால் இரும்பு சனிபகவானுக்கு ஆதிக்கம் செலுத்தும் பொருளாக கருதப்படுகிறது. அதனால் இரும்பு பொருளை அன்றைய தினம் கட்டாயம் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இரும்பு பொருளை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தால் கடன் தீருமாம். 

செல்வவளம் பெருக வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள்..!

எண்ணெய்:

சனிக்கிழமை செய்யக்கூடாதவை

எந்த எண்ணையாக இருந்தாலும் சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். நீங்கள் சனிக்கிழமை அன்று எண்ணெய் வாங்கினால் அடிக்கடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

உப்பு:

சனிக்கிழமை செய்யக்கூடாதவை

மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் தருவதாக ஐதீகம் உண்டு. அதில் முதன்மையானது உப்பு. கல் உப்பை வெள்ளி கிழமையில் வாங்குவது சிறந்தது. ஆனால் மறந்து கூட சனிக்கிழமை அன்று வாங்க கூடாது. சனிக்கிழமையில் அன்று உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். 

துடைப்பம்:

சனிக்கிழமை செய்யக்கூடாதவை

லக்ஷ்மி தேவி துடைப்பம் போன்ற பொருட்களிலும் குடியிருப்பாள். அதனால்  சுத்தம் செய்யும் பொருட்களான துடைப்பம், மாப், ஒட்டடை குச்சி போன்றவற்றை சனிக்கிழமை வாங்க கூடாது.

மாவு சார்ந்த பொருட்கள்:

சனிக்கிழமை செய்யக்கூடாதவை

மாவு சார்ந்த பொருட்களை சனி கிழமை அன்று வாங்க கூடாது. அப்படி வாங்கினால் வீட்டில் தீராத கஷ்டம் ஏற்படும். மேலும் நினைத்த காரியம் நடக்காமல் போகும். அதனால் சனிக்கிழமையில் மாவு சார்ந்த பொருட்கள் வாங்குவது தவிர்க்க வேண்டும்.

(Feb 2023) வாகனம் வாங்க ஏற்ற நாள் 2023

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement