திருவாதிரை விரதம் 2025 | Thiruvathirai Viratham 2025 in Tamil
Thiruvathirai Viratham 2025 in Tamil:- சிவபெருமானை வழிபடக்கூடிய பல்வேறு வகையான விரதங்களில் ஒன்று தான் திருவாதிரை. சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாள் தான் திருவாதிரை விரதம். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. ஆகவே சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும்.
மேலும் இந்நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் பெண்கள் தன் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாளில் திருவாதிரை விரதம் எடுப்பார்கள். சரி இந்த பதிவில் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை எப்பொழுது வருகிறது என்பதையும், திருவாதிரை விரதம் இருப்பதின் நன்மைகள் என்ன? மற்றும் ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன என்பதை இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
திருவாதிரை களி செய்வது எப்படி?
மார்கழி திருவாதிரை 2025 | Thiruvathirai 2025
இந்த ஆண்டு திருவாதிரை விரதம் ஜனவரி 13.01.2025 ஆம் தேதியன்று மார்கழி 29 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. திருவாதிரை நட்சத்திரம் ஜனவரி 12 ஆம் தேதியன்று காலை 11:24 AM மணிக்கு தொடங்கி மறுநாள் ஜனவரி 13 ஆம் தேதியன்று காலை 10:38 AM மணிக்கு முடிவடைகிறது.திருவாதிரை விரதம் 2025 – Thiruvathirai Viratham 2025:
திருவாதிரை விரதம் என்பது தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில் திருவாதிரை விரதம் எடுத்து, சுமங்கலிகள் தங்கள் தாலியினை மாற்றி சிவபெருமானை வழிபட்டால், தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விரதத்தை மாங்கல்யம் நோம்பு என்றும் சொல்வார்கள்.
பிரதோஷம் நாட்கள் 2025 |
திருவாதிரை நோம்பு 2025 – Thiruvathirai Nombu 2025:
பெண்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து அதற்கு அருகம்புல் வைத்து, விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, விநாயகருக்கு முன் தாலி சரடு வைத்து சுமங்கலி பெண்கள், விநாயகரை வழிபடுவார்கள்.
இந்த விரதத்தை பூர்த்தி செய்ய 18 வகையான காய்கறிகளில் சமைத்து, திருவாதிரை களி செய்து, பச்சரிசியில் அடை செய்தும் விநாயகருக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.
பின் சுமங்கலி பெண்கள் நிலவு தரிசனம் செய்வார்கள் பின் தாலி கயிறை மாற்றி கொள்வார்கள். இறுதியாக நோம்பிற்கு வந்தவர்கள் விருந்து உண்டபின் அனைவரும் விரதமிருந்த பெண்ணை தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
திருவாதிரை நோம்பு இருப்பதன் பலன் – Thiruvathirai nombu 2025:-
இந்த திருவாதிரை விரதம் நாளில் கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும். தங்கள் கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கலாம். எவரெல்லாம் இந்த திருவாதிரை நோம்பு இருக்கின்றார்களோ அவர்களுக்கு சிவசக்தின் அருள் கிட்டும். அதேபோல் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரமும் தங்களுக்கு கிடைக்கும். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.
2025 ஆண்டிற்கான அமாவாசை நாட்கள் நேரம் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |