நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு படுக்கைறையில் இதை மட்டும் Follow பண்ணுங்க

thookam vara enna seiya vendum in tamil

நிம்மதியான தூக்கம் வர

பொதுவாக  மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்  தூக்கம் ரொம்ப முக்கியமானது. ஒருவருக்கு நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் அவர்களுடைய வேலைகளை சரியாக பார்க்க முடியும். அத்தகைய உறக்கம் நமக்கு சரியாக இல்லையென்றால் நம்மளுடைய அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அதனால்  ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல தூக்கம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அத்தகைய தூக்கம் நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். அதற்கு படுக்கைறையில் வாஸ்து படி சில பொருட்களை வைத்தால் நிம்மதியான தூக்கத்தை வழிவகுக்கும். அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

கட்டில்:

கட்டில்

படுக்கைறையின் உள்ள கட்டில் சந்தனமரம், பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு  போன்றவற்றால் செய்த கட்டிலாக இருந்தால் நல்லது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. கட்டிலில் தலை வைக்கும் இடம் சிறிது உயரமாக இருந்தால் நிம்மதியான தூக்கம் வரும். அது போல கட்டிலில் போடும் மெத்தையானது இலவம் பஞ்சாக இருந்தால் நல்லது.

கட்டில் வைக்கும் முறை: 

கட்டிலை ஓரத்தில் வைக்க கூடாது. கட்டிலின் மூன்று புறங்களிலும் நடக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். இது போல் வைப்பதால் நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கல் உப்பு:

கல் உப்பு

படுக்கைறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பை வைத்தால் தேவையில்லாத கனவுகள் வராது.

படுக்கறை கதவு:

படுக்கறை கதவு

படுக்கைறையின் கதவுகள் வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். மேலும் ஜன்னல்கள் தென் மேற்கு திசையில் ஓரத்தில் இருந்தால் செல்வம் பெருகும் அதுமட்டுமில்லாமல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

படங்கள்:

படுக்கைறையில் மீன் ஓவியம்

படுக்கைறையில் மீன் ஓவியம் அல்லது வாத்துக்கள் ஓவியம் வைப்பது நல்லது.

படுக்கைறையில் இருக்க கூடாதவை:

படுக்கைறையில் உள்ள பாத்ரூம் கதவுகள் மூடியே இருக்க வேண்டும். அப்படி திறந்திருந்தால் கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

இறந்தவர்களின் போட்டோ, சாமி போட்டோ படுக்கைறையில் இருக்க கூடாது. இந்த படங்கள் இருந்தால் கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

படுக்கையறையில் கண்ணாடி, கடிகாரம், மீன் தொட்டி போன்ற பொருட்கள் இருக்க கூடாது. இந்த பொருட்கள் இருந்தால் அகற்றி விடுங்கள்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்