நாளைய ராசி பலன் | Tomorrow Rasi Palan in Tamil

Tomorrow Rasi Palan in Tamil

நாளைய ராசி பலன்கள் | Tomorrow Rasi Palan in Tamil

Tomorrow Rasi Palan in Tamil: பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சனைகளை கையாள இயலும். நாளைய தினத்தின் சுப அசுப பலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் திட்டமிட பொதுவான நாளைய ராசி பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க இந்த பதிவில் நாளைய ராசி பலன் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்தறியலாம்.

மாத ராசி பலன் 2021

Nalaiya Rasi Palan..!

மேஷம்:

Tomorrow Rasi Palan in Tamil –  மேஷ ராசிக்காரர்கள் நாளை செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும். மனதில் ஏற்படும் பதற்றத்தினை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை துணையை உங்களால் திருப்திப்படுத்த முடியாது. நாளை பணவரவு இருந்தாலும் தேவையில்லாத செலவுகள் வந்து போகும். தூக்கமின்மை காரணமாக ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ரிஷபம் | Tomorrow Rasi Palan for Rishabam in Tamil:

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு மிகவும் அமைதியாக காணப்படும். உங்கள் மேலதிகாரி உங்கள் பணியை பாராட்டுவார்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நாளைய நாளில் சேமிப்பதற்கு ஆரம்பிப்பீர்கள். உங்கள் மனதில் நம்பிக்கை தரும் எண்ணங்களும், மகிழ்ச்சியும் காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மிதுனம் | Tomorrow Rasi Palan for Mithunam in Tamil:

Tomorrow Rasi Palan in Tamil – மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நிதி நிலைமை உயர்ந்து காணப்படும். ஆனால் அதே நேரத்தில் செலவுகளும் அதிகரித்து காணப்படும். நாளை உங்களுடைய பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்தி எதிர்காலத்திற்கு திட்டமிட்ட வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள நபர்கள் உங்களுக்கு தொந்தரவு செய்வார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் எந்த ஒரு காரியத்தையும் தைரியமாக முடிவு எடுக்கவும். வாழ்க்கை நிலையானது அமைதியாக இருக்கும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்தி வைக்கவும். நாளை உறவு முறைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம் | Tomorrow Rasi Palan Simmam:

Tomorrow Rasi Palan for Simmam in Tamil – சிம்ம ராசிக்காரர்கள் நாளைய நாளில் அதிகமாக மருந்தை உட்கொள்ளாதீர்கள். நீண்டகால முதலீட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள். நாளைய நாளில் நண்பர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிடலாம். பணியிடத்தில் வேலையாட்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிலர் உங்களை அப்செட் ஆக்கலாம். தேவையில்லாத கவலைகளும், வருத்தங்களும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும். நாளை பணவரவு கையில் தங்காது. சேமிப்பதில் மிகவும் கஷ்டத்தினை எதிர்கொள்வீர்கள். எதிலும் நாளை நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.

துலாம்:

Tomorrow Rasi Palan in Tamil – துலாம் ராசிக்காரர்கள் நாளைய நாள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டயட்டை பாலோ செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ளவும். உங்களுக்குள் இருக்கும் கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களுடைய வேலை போகக்கூடும் மற்றும் நிதிநிலைமை பாதிக்கும். அலுவலகத்தில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் நாளைய நாள் முழுவதும் குடும்பத்தில் உள்ள நபர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு வந்தடையும். தங்கள் மகளுக்கு உடல்நல பிரச்சனை ஏற்படலாம். இதனால் மனதில் கவலை அளிக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலையின் ரகசியத்தினை மற்றவர்களிடம் கூறினால் வேலையானது கெட்டுப்போகும். நாளை முக்கியமான வேலைகளை மறந்து விடுவீர்கள்.

தனுசு:

Tomorrow Rasi Palan in Tamil – தனுசு ராசிக்காரர்கள் நாளை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு சிறப்பான நாள். தசைப் பகுதிகளுக்கு நிவாரணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்யலாம். நாளை சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள். சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள் நாளை அவர்களின் நெருக்கமான எந்தவொரு ஆலோசனையையும் பெறலாம்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்கள்  நாள் முழுவதும் புன்னகையுடன் இருங்கள். அதுதான் உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. பண பற்றாக்குறை பிரச்சனையினால் வீட்டில் வேற்றுமை உணர்வு காணப்படும். நாளைய நாளில் எதிலும் அலட்சியத்தினை தவிர்த்து கவனமாக இருக்கவும். நாளை உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்கள் குறைபாடுகளையும், விஷயங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள். இது உங்கள் ஆளுமையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் நாளை நல்ல தகவல் வந்தடையும்.

கும்பம்:

Tomorrow Rasi Palan in Tamil – நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் அவசரம் இல்லாமல் பொறுமையாக இருக்கவும். உங்கள் பிள்ளை காரணமாக பொருளாதார நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பை நாளை நீங்கள் காண்கிறீர்கள். இது உங்களுக்கு மனதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நாளைய நாளில் மறக்காமல் நன்றியைக் கூறுங்கள். தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம் பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்:

உங்களுடைய வெறுப்பு உணர்ச்சி வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் உறவு முறைகளும் பாதிப்படையும். நீண்டகால முதலீட்டை தவிர்க்கவும். நண்பர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிடுங்கள். உங்கள் அதிக பணிச்சுமையை பிறர் பெற விரும்புவார்கள். அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இன்றைய ராசி பலன்கள் 2021

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்