முருகன் பக்தி பாடல்கள் வரிகள் | Ullathile Nee Irukka Tamil Lyrics
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்துக்களின் தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி பக்தியுடன் வணங்கிட நிறைய முருகன் பக்தி பாடல்கள் வரிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் அந்த பக்தி பாடல் வரிகளில் ஒன்று தான் உள்ளத்திலே நீ இருக்க முருகன் பாடல் இந்த பாடலை பாடியவர் ஸ்ரீகாளி கோவிந்தராஜன். இவர் முருகனுக்கு நிறைய பக்தி பாடல்களை எழுதி பாடியும் உள்ளார். இவரது சொந்த ஓர் சீர்காழி. சரி வாங்க சீர்காழி கோவிந்தராஜன் பாடிய உள்ளத்திலே நீ இருக்க முருகன் பாடல் வரிகள் இப்பொழுது நாம் கீழ் பார்க்கலாம்.
உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் – Ullathile Nee Irukka Lyrics in Tamil:
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே – இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே – இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே – என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே – என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா – வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா – வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
மேலும் இது போன்று நிறைய ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தயவு கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |