வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Valai Maram Kanavil Vanthal Enna Palan..!
பொதுவாக கனவு என்பது மனிதனாக பிறந்த அனைவருக்கும் வரும். இத்தகைய கனவு ஆனது ஒரு நபர் பகலில் எதை பற்றி அதிகமாக யோசித்து கொண்டிருக்கின்றார்களோ அதுவே இரவு கனவாக வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதுவே கனவு வருவதற்கான காரணம் ஆகும். கனவு என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் அதில் நல்ல கனவு மற்றும் கெட்ட கனவு என்று இரண்டு விதமான கனவுகள் இருக்கிறது. இந்த கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் சிலருக்கு செடி, கொடி மற்றும் மரங்கள் தொடர்பான கனவுகள் வரும். இத்தகைய கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு தனித்தனி பலன்கள் உள்ளது. அதனால் இன்று வாழைமரம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Valai Maram Kanavil Vanthal Enna Palan:
உங்களுடைய கனவில் வாழை மரமோ அல்லது குலையுடன் கூடிய வாழை மரமோ வந்தால் வாழ்க்கையில் புதிதாக ஏதோ ஒரு முன்னேற்றம் நிகழப்போகிறது என்பதை குறிக்கிறது.
இத்தகைய கனவின் மூலம் உங்களுக்கு வரும் நன்மையானது முற்றிலும் வெற்றிபெறக்கூடியதாக அமையும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் வாழைப்பழம் வந்தால் அது நல்லதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இத்தகைய கனவினால் உங்களுடைய வாழ்க்கையில் புத்துணர்ச்சி கிடைத்து புதிய மாற்றங்கள் நன்மை அளிக்கும் வகையில் காணப்படும்.
மேலும் அனைத்து செயலிலும் சுறு சுறுப்பாக செயல்பட்டு நேர்மை குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக புதிய வெற்றியுடன் கூடிய லாபம் ஆனது விரைவில் கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.
வாழைத்தார் கனவில் வந்தால் என்ன பலன்:
ஆழ்ந்த தூக்கத்தில் நீங்கல் இருக்கும் போது வாழை மரத்தில் வாழைத்தார் இருப்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கூடி வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
அதாவது உங்களுக்கோ அல்லது உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ திருமணத்திற்காக வரன் பார்த்து கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த செயல் நிறைவடைந்து சுப நிகழ்ச்சிகள் வரப்போகிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
வாழைப்பூ கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் வாழைப்பூ தோன்றினால் அது சாதகமான பலன்களை குறிக்கிறது. இதுநாள் வரையிலும் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இதுநாள் வரையிலும் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்க போகிறது என்பது இந்த கனவிற்கான அர்த்தம் ஆகும்.
எருமை கனவில் வந்தால் என்ன பலன் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |