வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை

Updated On: April 21, 2026 5:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியது | Vasthu Sasthram in Tamil

வணக்கம்  நண்பர்களே எல்லாருக்கும் வீடு கட்டுவது பெரிய ஆசை கனவாக இருக்கும்.  அப்படி பார்த்து பார்த்து கட்டும் வீடு அழகா இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது முக்கியம். அப்போதுதான் நாம் கட்டும் வீடு சகல அம்சமும் நமக்கு கிடைக்கும். வீடு கட்டுவது என்ற பேச்சை எடுத்தால் கூட பஞ்சாங்கம் பார்ப்பார்கள். வீடு கட்டுவதற்கென்று பலமொழிகள் இருக்கிறது. எடுத்துக்காட்டாக வீட்டை கட்டி பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். ஒரு வீடு கட்டுவது என்றால் சுலபமான வேலை இல்லை அதற்கென்று பத்து முக்கியமான விசயம் கவனிக்க வேண்டி இருக்கும் அதனை பின் வரும் பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கிய பத்து விசயங்கள்:

Vasthu Sasthram in Tamil

  • முதலில் கவனிக்க வேண்டியவை பூஜை அறை. அந்த பூஜை அறை வடகிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது. சுவாமி படங்கள் கிழக்கு திசையை பார்க்கும் படி இருப்பது நல்லது.

துளசி மாடம் வாஸ்து:

துளசி மாடம்

  • பெரும்பாலனோர் வீட்டில் இதனை வைப்பதும் இல்லை வளர்ப்பது இல்லை. துளசி செடி வீட்டின் இருப்பது நல்லது அதும் கிழக்கு திசையில் பார்த்த படி இருப்பது மிகவும் நல்லது. இதனை வளர்ப்பதால் நிறைய மருத்துவகுணம், சுத்தமான காற்றையும் நமக்கு அளிக்கிறது.

​விளக்கு ஏற்றும் திசை:

விளக்கு ஏற்றும் திசை

  • விளக்கு ஏற்றுவது பாரம்பரியம் என்பதால் மட்டும் ஏற்றுவது இல்லை. விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ளவர்களின் பலவிதமான எண்ணங்களை மாறி ஒருமித்த யோசனைகள், அமைதி, சந்தோசத்தையும் வெளிபடுத்தும் என்பதற்காக விளக்கு ஏற்றுவார்கள். கிழக்கு திசையில் ஏற்றுவது நல்லது.

படுக்கையறை வாஸ்து:

​படுக்கையறை

  • வீடு கட்டும் போது நாம் அதிகம் இருக்கும் இடம் அழகாவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பவர்கள். படுக்கையறை கட்டும் போது திசை பார்த்து கட்டுவார்கள். தூங்கும் அறை தெற்கு அல்லது மேற்கு திசையில் இருப்பது நல்லது.

​தலை வைத்து தூங்கும் திசை:

தூங்கும் திசை

  • படுக்கையறை எவ்வளவு முக்கியமோ அதேபோல், நாம் தூங்கும் போது அதற்கென்ற திசையில் தூங்கினால் மட்டும் நன்மையையும் கிடைக்கும். கிழக்கில் தலை வைத்து படுப்பதால் நேர்மறை ஆற்றல், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவதால் கனவு தூக்கம்யின்மை, மனச்சோர்வு வரும் இதனால் வடக்கு திசையில் தலை வைத்து தூங்ககூடாது என்பார்கள்.
மனையடி சாஸ்திரம்

சமையலறை வாஸ்து டிப்ஸ்:

  • வீடு கட்ட ஆரம்பித்தால் முதலில் அம்மா சொல்வது சமையல் அறை பெரிதா அழகா இருக்கணும் என்று சொல்வார்கள். வாஸ்த்து பார்த்து அந்த திசையில் வையுங்கள் என்று சொல்வார்கள். சமையல் அறை என்றால் தென்கிழக்கு பகுதில் கிழக்கு நோக்கி சமையல் செய்வது போல் அமைவது நல்லது.
  • அல்லது பூஜை அறைக்கு அருகில் இருப்பது நல்லது. கழிப்பறைக்கு அருகில் இருப்பது தவறு அப்படி அமைவது நல்லது அல்ல.

படிக்கட்டு வாஸ்து:

படிக்கட்டு வாஸ்து

  • வீட்டில் அமையும் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டுவது நல்லது.
  • வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.

கிணறு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா:

Vasthu Sasthram in Tamil

  • வீடு கட்டும் முன்புறத்தில் கிணறு தோண்டுவது தண்ணீர் தேவைக்காக மட்டும் கட்டுவது இல்லை. கிணறு தோண்டுவதால் வீட்டின் சௌபாக்கியங்கள் அதிகரிக்கும்.
  • வீட்டில்  கிணறு தோன்றும் பொழுது வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டுவது நல்லது அதுவும் வீட்டின் நடுவில் கிணறு தோண்டுவது நல்லது.
  • கிணறுகள் இருக்கும் பக்கத்தில் வீடு கட்டுவது கூடாது.  8 அடி தூரத்தில் இருப்பது நல்லது.

வீட்டின் முன் கிணறு இருக்கலாமா:

வீட்டின் முன்புறத்தில் கிணறு இருக்க கூடாது. பின்புறத்தில் தான் கிணறு இருக்க வேண்டும்.

வீடு கட்டும் முன் போக வேண்டிய கோவில்:

வீடு கட்டும் முன், பூமிநாதர் கோயில் அல்லது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடலாம். பூமி தொடர்பான குறைபாடுகள், தோஷங்கள் நீங்கி, வீடு-மனை யோகம் கிடைக்கும் என்பது ஆன்மிகத்தில் நம்பிக்கையாக இருக்கிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now