வீடு பற்றிய கனவு கண்டால் என்ன பலன் | Veedu Kanavu Palangal in Tamil

Advertisement

வீடு கனவு பலன்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீடு பற்றிய கனவு கண்டால் என்ன பலன் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம்மில் பலருக்கும் கனவுகள் வருவது சாதாரணமானது தான். அப்படி வரும் போது சில கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் சில கனவுகள் ஞாபகத்தில் இருக்காது. அப்படி மறந்து போகும் கனவுகள் சில நேரங்களில் நடக்கும் போது எங்கோ நடந்தது போல் இருக்கும்.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தான் கனவு வரும். இது யாருக்கு தெரியும். அது அனைத்தும் சரி கனவு காண்பது நாம் தான் ஆனால் மறந்துவிடுகிறோம் அது ஏன் தெரியுமா? தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கனவு ஏன் சீக்கிரம் மறந்து போகிறது தெரியுமா..? வாங்க இப்போது வீடு பற்றிய கனவு வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்..!

வீடு கனவு பலன்கள்:

ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. நாம் கனவுகளில் சில விஷயங்கள் நமக்கு பின்பு நடக்க போவதை சொல்வது என்று சாஸ்திரம் சொல்கிறது.

கூரை வீடு கனவில் வந்தால்:

கூரை வீட்டை கனவில் கண்டால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என்றும், அதேபோல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய போகிறது என்றும் கூறுகிறது..

வாசலில் தோரணத்துடன் பார்த்தால்:

வீட்டின் வாசலில் தோரணத்துடன் பார்த்தால் உங்களுக்கு ஏதேனும் நல்ல செய்து வரப்போகிறது என்பதை குறிக்கிறது.  மேலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறது என்றும் சொல்லலாம்.

புதிய வீடு கனவில் வந்தால்:

புத்தம் புதிய வீடு கனவில் வந்தால் நீங்கள் பார்க்கும் வேலையிலிருந்து மாற்றம் அதேபோல் நற்பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்லாம்.

வீட்டை தேடுவது:

உங்களின் வீட்டை தேடுவது போல் கனவு கண்டால் சில புதியவர்களை பார்த்து அதன் பின் நம்பிக்கையானவர்களை இழக்க போகிறீர்கள் என்றும் சொல்லாம்.

பெரிய வீடு கனவில் வந்தால்:

ஒரு பெரிய மாடிவீட்டை காண்பது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை குறிக்கிறது என்றும். அதனால் ஏதேனும் நிகழப்போகிறது என்றும் சொல்லாம்.

வீடு காலி செய்வது போல் கனவு:

நீங்கள் வீட்டு இல்லாதது போல் கனவு காண்பது எதிர்மறை ஆற்றல், துரதிஷ்டம், நிதி சிக்கல் போன்ற வரை குறிக்கும்.

வீடு மாற்றுவது போல் கனவு வந்தால்:

நீங்கள் இருக்கும் வீட்டை விட்டு வேறுவிட்டிற்குள் செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு முக்கியமான செய்திகள் ஏதோ வரப்போகிறது என்றும். அல்லது வேறு இடத்திற்கு பயணம் செல்வீர்கள் என்று பலன்.

அழகான வீடு கனவில் வந்தால்:

உங்கள் கனவில் வசதியான வீட்டையோ அல்லது அழகான வீட்டையோ கனவில் பார்த்தால் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழபோகிறீர்கள் என்று பலன்.

வீடு கட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்:

வீடு கட்டுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு பல சோதனைகள் வர போகிறது என்று அர்த்தம்.

கனவு பலன்கள்..!

வீடு இடிவது போல் கனவு:

வீடு இடுவது போல் கனவு கண்டால் உறவினர்களால் ஏதோ ஒரு பிரச்சனை வரபோகிறது என்று அர்த்தம்.

வீடு வாங்குவது போல் கனவு கண்டால்:

புதிய வீட்டை வாங்குவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு கண்டால்:

வீட்டை விட்டு வெளியேறுவது போல் கனவு கண்டால் அவர் கடுமையான நோயால் பாதிக்கப்படப்போகிறார் என்று அர்த்தம்.

பழைய வீடு கனவில் வந்தால்:

பழைய வீடு கனவில் பார்த்தால் குடும்பத்தில் வீணான குழப்பம் வரப்போகிறது என்றும். அதேபோல் துன்பங்களும் ஏற்படும் என்றும் அர்த்தம்.

  கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement